‘வெற்றி’ என்ற வார்த்தைக்கு பதில் வேறு வார்த்தைதையை குறிப்பிட்ட வாழ்த்து சொன்ன niroop – பாலாவின் Thug பதில்.

0
838
- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் பட்டத்தை வென்ற பாலாஜிக்கு வாழ்த்து சொன்ன நிரூப்பின் பதிவு ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை நிறைவடைந்தது. 16 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 12 பேர் வெளியேற்றப்பட்டு இறுதி வாரத்தில் பாலாஜி, நிரூப், தாமரை, ரம்யா ஆகிய 4 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இப்படி ஒரு நிலையில் 35 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் பிக் பாஸ் அல்டிமேட் பட்டத்தை வென்றார் பாலாஜி முருகதாஸ்.

-விளம்பரம்-

முதல் இடத்தை பிடித்த பாலாஜி :

மேலும், பாலாஜி தான் இந்த சீசனில் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் பல வாரங்களுக்கு முன்பே கணித்துவிட்டனர். ஆனால், இரண்டாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்தது. மேலும், ஜூலி முதல் இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் நிச்சயம் இரண்டாம் இடத்தையாவது பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

இரண்டாம் இடத்தை பிடித்த நிரூப் :

ஜூலியின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் இரண்டாம் இடத்தை நிரூப்பும் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை ரம்யா மற்றும் தாமரையும் பிடித்துள்ளனர். நிரூப் கடந்த சீசனில் பைனலுக்கு வர மற்ற போட்டியாளர்களிடம் சமரசம் செய்து இருந்தார். மேலும், இந்த சீசனில் எப்படியாவது டைட்டிலை வெற்றி பெற வேண்டும் என்று நினைத்துகொண்டு இருந்தார் நிரூப்.

பாலாஜிக்கு வாழ்த்து சொன்ன நிரூப் :

இப்படி ஒரு நிலையில் வெற்றி பெற்ற பாலாஜிக்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் இரண்டாம் இடத்தை பிடித்த நிரூப், பாலாஜிக்கு வாழ்த்து கூறி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், பிக் பாஸ் கோப்பையை claiming செய்ததர்க்கு வாழ்த்துக்கள் பாலாஜி என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பாலாஜி ‘அது வெற்றி (Winning) டா’ என்று Thug பதிலை கொடுத்து இருக்கிறார். இந்த பதிவால் தற்போது பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் நிரூப்.

-விளம்பரம்-

Claim என்ற வார்த்தைக்கு அர்த்தம் :

நிரூப்பின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாலாஜி வெற்றி பெற்றது நிரூப்பிற்கு பொறாமை. அதனால் தான் அவர் வெற்றி என்று சொல்லாமல் ‘Claim’ என்று சொல்லி இருக்கிறார் என்று கூறி வருகின்றனர். மேலும், சிலரோ Claiming என்ற வார்த்தை என்ன அர்த்தம் என்பதை எல்லாம் பதிவிட்டு வருகின்றனர். அதாவது, ஒரு விஷயத்தை தன்னுடையது என்று ஒருவர் பெற்றால், அதை நீங்கள் உண்மையோ இல்லையோ என்ற சந்தேகத்தில் இருப்பதற்கு பெயர் தான் Calim என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

நிரூப் பாலாஜி Friendship :

பாலாஜி மற்றும் நிரூப் இருவருமே பிக் பாஸ் வருவதற்கு முன்பே நண்பர்கள். ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டு தான் இருந்தது. அதிலும் குறிப்பாக நிரூப்பின் முன்னாள் காதலியான அபிராமியிடம் பாலாஜி நெருக்கம் காட்டி வந்தது நிரூபிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இது குறித்து பல முறை பலரிடமும் புலம்பி இருந்தார் நிரூப்

Advertisement