அர்ச்சனாவை தொடர்ந்து நிஷா எடுத்த அதிரடி முடிவு – எல்லாம் இதான் காரணம்.

0
13459
nisha
- Advertisement -

சமூக வலைதளத்தில் தொடர்ந்து வரும் கருத்துக்களால் அதிரடி முடிவை எடுத்துள்ளார் நிஷா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-
archana

மற்ற சீசன்களைவிட இந்த சீசனில் தான் எக்கசக்க விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதிலும் ஷிவானி, ஆஜீத் ஆகியோரை எல்லாம் பொத்தி பொத்தி காப்பற்றியது பிக் பாஸ்.விஜய் டிவி பிரபலன்களான ரியோ, நிஷா, கேப்ரில்லா ஆகியோர் அர்ச்சனாவுடன் சேர்ந்து லவ் பேட் என்ற குழுவையும் ஆரம்பித்தனர். ஆனால், இந்த குழுவில் இருந்த யாரும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கவில்லை என்பது தான் சோகம். அதிலும் அர்ச்சனா மற்றும் நிஷா செய்த அன்பு பஞ்சாயத்து பலரையும் காண்டாக்கியது.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அர்ச்சனா மற்றும் நிஷாவின் பல செயலை பலரும் சமூக வலைதளத்தில் கேலி செய்தனர். மேலும், இதை பல்வேறு மீம் கிரியேட்டர்களும் கலாய்த்து இருந்தனர். அதே போல அர்ச்சனா உள்ளே இருந்த போது நிஷாவிடம் அன்பு ஜெய்க்கும்னு நம்புறயா என்று ஆவேசமாக கேட்ட வீடியோ கூட அந்த சமயத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளானது. அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவரது ஓவரான அன்பு ஸ்டரட்ர்ஜி தான் என்று பலரும் கூறி வந்தனர். சமூக வலைதளத்தில் இதே விஷயத்தை குறிப்பிட்டு பலரும் அர்ச்சனாவை கேலி செய்து வருகின்றனர்.

அதுவும் புதிய மனிதா டாஸ்க்கின் போது அர்ச்சனாவை அழ வைக்க நிஷா, அர்ச்சனாவின் அப்பாவை பற்றி கேட்க டாஸ்க்கிற்கு என் அப்பாவின் மரணம் தான் கிடைத்ததா நிஷா என்று அர்ச்சனா கூறியதால், நிஷா அவரை சமாதானம் செய்ய பார்த்தபோது அவரும் கொஞ்சம் ஆவேசமாக பேசினார். ஆனால், அப்போதும் அர்ச்சனா சமாதானம் ஆகவில்லை. பின்னர் நிஷா எப்படியோ அழுது புலம்பி எப்படியோ அர்ச்சனாவை சமாதானம் செய்தார். ஒரு கட்டத்தில் மழை பெய்ய அதை பார்த்த அர்ச்சனா, இந்த மழை தான் எங்க அப்பா என்று கூற, அப்பா என்னை மன்னிச்சிடுங்க அப்பா, அப்பா என்று நிஷா ஒரு ஆஸ்கார் பெர்மார்மன்ஸையே செய்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ஆரி பட்டத்தை ஜெயித்து நான்கு நாட்கள் கழித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிஷாவை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் கமன்ட் செக்ஷனை ஆப் செய்து விட்டார் நிஷா, ஏற்கனவே அர்ச்சனா பிக் பாஸ்ஸுக்கு பின்னர் சமூக வலைதளத்தில் தனக்கு இருந்த எதிர்ப்பை பார்த்து, இந்த லவ் மற்றும் வெறுப்பிற்கு இடையில் நான் நொந்து போய்விட்டேன். நான் ட்விட்டரில் இருந்து விலகுவதை கொண்டாட தயாராக இருக்கும் ஹேட்டர்ஸ்களே நான் கண்டிப்பாக மீண்டும் உறுதியோடு வருவேன். உங்களின் அடுத்த குறியை தேர்ந்தெடுங்கள் என்று குறிப்பிட்டு SpreadLoveNotHate #Iamwhoiam #LifeBeyondBiggBoss என்று பல டேக்குகளை போட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement