நித்யா, பாலாஜிக்கு கொடுத்த 100 நாள் முடிஞ்சது.! ஆனா நித்யா எடுத்துள்ள அதிரடி முடிவ பாருங்க.!

0
1930
nithya
- Advertisement -

சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் தாடி பாலாஜி. சினிமாவில் வாய்ப்பு குறையவே தொலைக்காட்சி பக்கம் திரும்பிவிட்டார். மேலும், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒன்றிணைத்து விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாலாஜி வெளியேறியபோது நித்யா, பாலாஜிக்கு 100 நாள் பரீட்சை ஒன்றை வைத்தார்.

இதையும் படியுங்க : பாலாஜியிடம் மகள் வாங்கிய 2 சத்தியம் , மனைவி 4 சத்தியம்.!இதை செய்தால் தான் உன்னுடன் வாழ்வேன்.. நித்யா அதிரடி. ! 

- Advertisement -

Read more at: https://tamil.behindtalkies.com/nithya-gets-promise-from-balaji/

அது என்னவெனில் பாலாஜி வெளியே வந்து 100 நாட்கள் குடிக்காமல், கோபப்படாமல் இருந்தால் அவருடன் சேர்ந்து வாழ தயார் என்று தெரிவித்திருந்தார் நித்யா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து 100 நாட்களுக்கு மேலான நிலையிலும் நித்யா பாலாஜியுடன் சேரவில்லை.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது பெயரை தேஜு என மாற்றிய நித்யா, தற்போது அதிரடியாக அரசியலில் இறங்கி விட்டார். மருத்துவர் ஸ்வேதா ஷெட்டி என்பவர் துவங்கியுள்ள ‘தேசிய பெண்கள் கட்சியில்’ இணைத்துள்ளார். இதனை உறுதி படுத்தும் விதமாக இன்று ‘தேசிய பெண்கள் கட்சியின் சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் உண்மையில் பாலாஜியுடன் நித்யா சேருவாரா மாட்டாரா, இல்லை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாலாஜி, நித்ய சொன்னபடி நடக்கவில்லையா என்பது தான் தெரியவில்லை. இவை அனைத்திற்கு நித்யா பதிலளித்தாள் தான் உண்டு.

Advertisement