பாலாஜியிடம் மகள் வாங்கிய 2 சத்தியம் , மனைவி 4 சத்தியம்.!இதை செய்தால் தான் உன்னுடன் வாழ்வேன்.. நித்யா அதிரடி. !

0
1148
nithy-balaji
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருந்த நிலையில் நேற்று முதல் போட்டியாளராக பாலாஜி வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுவதற்கு முன்பாக நேற்று பாலாஜி மேடையில் பேசியது அனைத்து ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது. அதே போல இதுநாள் வரை பாலாஜி வெளியில் வந்ததும் நித்தியாவுடன் சேர்ந்து விட மாட்டாரா என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கான விடையும் நேற்று கிடைத்தது.

-விளம்பரம்-

kamal

- Advertisement -

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்த பாலாஜிக்கு, நேற்று வெளியேறிய பாலாஜிக்கும் நிறைய வித்யாசங்கள் இருத்தது அதனை கமலஹாசன் கூட குறிப்பிட்டு சொன்னார். நேற்று மேடையில் தனது மனைவியையும், மகளையும் கண்டு மிகவும் கண்கலங்கி நின்றார். பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அதிகம் உச்சரித்த பெயர் என்றால் அது அவருடைய மகள் போஷிக்கா தான்.

poshika

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டின் ப்ரீஸ் டாஸ்கின் போது நித்யா மற்றும் போஷிகா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது போஷிகா பிக் பாஸ் வீட்டில் நுழைந்த உடனே பாலாஜியிடம் இரு சத்தியம் வாங்கியுள்ளார். அது என்னவெனில்:

போஷிகா வாங்கிய சத்தியம்:

1.கெட்ட வார்த்தை பேசக்கூடாது.

2. குடிக்ககூடாது.

இந்த இரண்டு சத்தியத்தையும் எனது மகளுக்காக கண்டிப்பாக கடைபிடிப்பேன் என்று பாலாஜி நேற்றைய நிகழ்ச்சியின் போது மேடையில் தெரிவித்திருந்தார்.

nithya balaji

இந்த நிகழ்ச்சியில் பாலாஜி தன்னை இந்த அளவிற்கு மாற்றிக்கொண்டதற்கு முக்கிய காரணமே மீண்டும் தனது குடும்பத்துடம் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காக தான். நித்யா, பாலாஜியிடம் சேர்ந்து வாழ்வதாக நேற்று மேடையில் தெரிவித்திருந்தாலும் பாலாஜிக்கு சில கண்டிஷன்களையும் வைத்துள்ளார் நித்யா,நேற்றைய நிகழ்ச்சியில் நித்யா பேசும் போது, நான் பாலாஜியிடம் மீண்டும் சேர முடிவு செய்தது போசிக்காவிற்காக தான் என்று கூறியிருந்தார். அப்போது சில கண்டிஷன்களையும் கூறினார்.

நித்யா வாங்கிய சத்தியம்:

1. குடிக்க கூடாது.

2. கெட்ட வார்த்தை பேசக் கூடாது.

3. சந்தேகபடக் கூடாது.

இந்த அனைத்தயும் பாலாஜி செய்து, அவர் மாறிவிட்டார் என்றால் கண்டிப்பாக என்னுடைய குழந்தைக்காக அவரை ஏற்றுக்கொள்வேன். அதுவரை இன்னொரு பிக் பாஸ் அவருக்கு வெளியில் காத்துக்ககொண்ருக்கிறது என்று பேசினார் நித்யா.

Advertisement