வெளியானது இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட்.! இந்த வாரம் கண்டிப்பா இவர் தான்.!

0
10818
Bigg-Boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிறந்த போட்டியாளராக வனிதா தர்ஷன் லாஸ்லியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே, இவர்கள் மூவரும் இந்த வார தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தகுதி பெற்றனர். இன்று வெளியான முதல் பிரம்மாவில் இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில் தர்ஷன் மற்றும் வனிதா இருவரும் லாஸ்லியாற்காக விட்டுக் கொடுத்து விட்டதனால் லாஸ்லியா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எனவே, லாஸ் லியா இந்த வாரம் லாஸ்லியா தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளதால் அவரை நாமினேட் செய்ய இயலாது. இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்ற உள்ளது. இந்த நிலையில் இன்றைய நாமினேஷன் பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.

இதையும் பாருங்க : சேரனை பற்றி பேசிய லாஸ்லியா.! ரகசிய அறையில் இருந்து கவனிக்கும் சேரன்.!

- Advertisement -

இந்த வார நாமினேஷனில் :

  • கவின்
  • வனிதா
  • ஷெரின்
  • தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றுள்னர்.

இந்த வார நாமினேஷனில் கவின், வனிதா ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே அவர் எப்போது நாமினேஷனில் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், அவர் ரீ-என்ட்ரி கொடுத்த முதல் வாரத்தில் அவரை நாமினேட் செய்ய முடியாது என்று பிக் பாஸ் அறிவித்துவிட்டார்.

-விளம்பரம்-

அதே போல கடந்த வாரம் அவரை தலைவராக்கி கடந்த வாரமும் அவரை நாமினேஷனிலிருந்து காப்பாற்றிவிட்டார். இந்த நிலையில் தற்போது வனிதா மீண்டும் நாமினேஷனில் வந்திருப்பதால் அவர் கண்டிப்பாக வெளியேறுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement