ஆரவ்வுடன் காதல் இருக்கா..? மேடையில் ஓவியா அளித்த வெளிப்படையான பதில்.!

0
604
oviya-aarav

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. சொல்லப்போனால் ஆராவ், ஓவியாவை வைத்து தான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் என்றும் கூறலாம்.

Big-gboss-oviya

- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா ஜோடி தான் பிக் பாஸ் வீட்டின் லைம் லைட்டாக இருந்து வந்தனர்.ஆரவ்விடம் காதல் வலையில் விழுந்த ஓவியா, ஆரவ் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்ததும் மிகவும் நொந்து போனார்.

இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 30 )நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 2 வின் இறுதி போட்டிக்கு நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நடிகை ஓவியாவிடம் அரங்கத்தில் இருந்த பெண் ரசிகை ஒருவர், கடந்த சீசனில் நீங்கள் இருந்த போது ஆரவ்வை காதலித்து எங்கள் எல்லோருக்கும் தெரியும். அவரை நீங்கள் இப்போதும் காதலிக்கிறீர்களா? அப்படி இல்லை என்றால் உங்கள் இரண்டு பேருக்கும் இருக்கும் உறவு என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

-விளம்பரம்-

Aarav

இதற்கு பதிலளித்த நடிகை ஓவியா, எங்களுக்குள் ஒரு ஆரோக்யமான உறவு இருக்கிறது என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். பின்னர் கமல் மேடையில் அமர்ந்திருந்த போட்டியாளர்களை கை காண்பித்து இவர்களை காதலிக்கவில்லயா என்று கேட்டது, உங்களை (கமல்) தான் நான் மிகவும் காதலிக்கிறேன் என்று கூறிவிடுகிறார்.

ஓவியா மற்றும் ஆரவ் காதலிப்பது உலகத்திற்கே தெரியும் என்றாலும் அதனை இருவரும் ரகசியமாகவே வைத்து வருகின்றனர்.ஆனால், சமீபத்தில் ஓவியா மற்றும் ஆராவ் ஒன்றாக ஊர்சூத்திய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement