பிக் பாஸ் வீட்டில் ஓவியாவா..? இது என்ன புது கதையை இருக்கு.!

0
1764
oviya
- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை மிகவும் கரவர்ந்தவர் நடிகை ஓவியா தான். தனது உண்மையான குணத்தாலும், குறும்புத்தனமான செயல்களாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு ஆர்மியையே உருவாக்கினார் ஓவியா.

-விளம்பரம்-

Aishwarya

- Advertisement -

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் ஓவியா போன்று வேறு யாரும் இல்லை என்பது தான் உண்மை, அதனை பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே யாஷிகா தான் ஓவியா செய்தது போல சில சுட்டி தனமான செயல்களை செய்து ஓவியா பெயரை எடுத்துவிடலாம் என்று எண்ணினார் ஆனால் அது முற்றிலும் வேலைக்கு ஆகாது என்று பின்பு அவரே உணர்ந்து கொண்டார்.

ஆனால், தற்போது ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டில் ஓவியா என்ற பெயரை பெற்று விடலாம் என்று செய்து வரும் சில செயல்கள் தான் ரசிகர்களை மிகவும் எரிச்சலூட்டியுள்ளது. அதிலும் ஓவியா போன்றே பாய் கட் செய்துவிட்டதுடன் ‘பார் முழுசாக’ஓவியாவாக மாறியுள்ள ஐஸ்வர்யாவை பார் ” என்பது போல ஓவர் பில்ட் அப் கொடுத்து வருகிறார் ஐஸ்வர்யா.

-விளம்பரம்-

balaji

ஆனால், ஐஸ்வர்யாவின் இந்த உடான்ஸ் வேலைகளை கண்டுகொண்ட ஜனனி, பண்றதெல்லாம் வேண்டும் என்றே ஓவியா ஸ்டைலில் காபி அடிக்கிறார். காப்பி பண்ணா அவங்கள மாதிரி ஆகிட முடியாது என்று சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் கூறியிருந்தார். அதே ப்ரோமோ வீடியோவில் பாலாஜியும் , முடி வெட்டியதிலிருந்து ஓவியா, ஓவியானு அவரை சொல்றீங்க.

Buigg-boss-aishwarya

ஓவியா யாரு இவங்க யாரு என்று கூறுகிறார். இறுதியில் விஜயலக்ஷ்மி, தமிழ் படம் பண்ணனும், ஆர்மி வேணும் ஆனா அதுக்காக ஒன்னும் பண்ண மாட்டாங்க என்று கூற அந்த ப்ரோமோ முடிகிறது.புலியை பார்த்து எலி சூடு போட்டுக் கொண்டது என்ற கதை போல ஓவியா போல நடந்து வரும் ஐஸ்வர்யாவின் செய்லகளை காண சகிக்க முடியவில்லை என்று பலரும் புலம்பி வருகின்றனர்.

Advertisement