மொக்க DP மொக்க ஹேர் ஸ்டைல். கிண்டல் செய்த ரசிகருக்கு ஓவியாவின் பதில்.

0
40035
Oviya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். அதிலும் இந்த முதல் சீசனில் பங்குபெற்ற நடிகை ஓவியா ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தார். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார் பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார் இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து. மேலும், இவருக்கு என்று சமூக வளைதளத்தில் பல்வேறு ஆர்மிக்களையும் உருவாக்கினார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : தனுஷை அசுரன் பட பாணியில் வரவேற்க நினைத்து கைதான ரசிகர் சுள்ளான் செந்தில்

பிக்பாஸ் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை வென்ற இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பெற்ற பிரபலத்தை வைத்து இவருக்கு எந்த பட வாய்ப்பும் தேடி வரவில்லை. இதனால் ஒரு சில படங்களில் அவ்வப்போது தலை காண்பித்து வந்த ஓவியா, சமீபத்தில் 90எம்எல் என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் ஆபாச காட்சிகளில் நடித்தும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசி ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு உள்ளானார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் நடிகை ஓவியா தனது ஹேர்ஸ்டைலை டாம் பாய் லுக்கில் கட் செய்து கொண்டு வித்தியாசமாக சுற்றி வந்தார். இந்த நிலையில் மீண்டும் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார் ஓவியா சமீபத்தில் நடிகை ஓவியாவின் இந்த ஹேர்ஸ்டைலை கண்டு ரசிகர்கள் கண்டமேனிக்கு கழுவி ஊற்றிய வருகிறார்கள் . அதில் ஒரு ரசிகர், மொக்க dp மொக்க ஹேர் கட். நீங்க பாஸ்ல வந்த மாதிரி ஹேர் ஸ்டைல் வைக்க கூடாது என்று கமன்ட் செய்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஓவியா, என்னுடைய மூளையைத்தான் வளர்க்க முயற்சி செய்து வருகிறேனே தவிர என்னுடைய முடியை அல்ல. என்னுடைய முடி, தோல், என்னுடைய வாழனும் எதுவும் முக்கியம் கிடையாது. நான் எப்போதும் சுந்தரம் ஆனவள். மேலும், நாம் அனைவரும் அழகானவர்கள் தான் என்று பதில் அளித்துள்ளார்.ஓவியாவின் இந்த பதிலுக்கு கமெண்ட் செய்த அந்த ரசிகர், ஓவியாவின் ரசிகர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

இந்த ஹேர் ஸ்டைலை வெச்சுட்டு ஒரு ஷாப் ஓபன் பண்ண முடியுமா ? இல்லை கூப்பிடு வாங்கலா? என்று பதிலளித்தார். ரசிகரின் இந்த கமன்ட்டிற்கு பதில் அளித்த ஓவியா, என்னுடைய ரசிகர்கள் எப்போதும் தலைவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கவலைப்படாதீர்கள் நான் விக் வச்சிக்கிறேன் என்று கமெண்ட் செய்துள்ளார்

Advertisement