தனுஷை அசுரன் பட பாணியில் வரவேற்க நினைத்து கைதான ரசிகர் சுள்ளான் செந்தில்.

0
1660
dhanush

“ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் மூலம் இந்த உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தவர் நடிகர் தனுஷ். சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர். இவர் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை செய்தது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் செந்தில் குமார் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த படம் “பட்டாஸ்”.

இந்த வருடம் தொடக்கத்திலேயே தனுஷ் அவர்கள் வேற லெவல் மாஸ் காட்டி உள்ளார். தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் முதன் முறையாக நடித்திருக்கும் படம் “ஜகமே தந்திரம்”. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த படத்தை சசிகாந்த் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான Y Not ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இது தனுஷின் 40வது திரைப்படம். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் கலையரசன், சஞ்சனா நடராஜன், வாக்ஸல் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ வடிவேலுவுடன் தன்னை இணைத்து வெளியான மீம் குறித்து ராஷ்மிகா.

இந்த படம் மே 1 ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். இந்த படத்தில் தனுஷ் அவர்கள் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இந்நிலையில் நெல்லையில் உள்ள சினிமா திரையரங்கிற்கு வரவிருந்த நடிகர் தனுஷை வரவேற்கும் விதமாக ஏற்பாடு செய்த கேக் வெட்டும் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் பித்தளை வாள் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மோஷன் போஸ்டர் இந்த மாதம் 19 ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது.

-விளம்பரம்-
அசுரன் படப்பாணியில் வரவேற்க நினைத்து அரெஸ்ட்டான ரசிகர்..!

அசுரன் படப்பாணியில் வரவேற்க நினைத்து அரெஸ்ட்டான ரசிகர்..!#Crimefile #Winnews

Wintv India ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಫೆಬ್ರವರಿ 20, 2020

இந்த நிலையில் நெல்லையில் இருக்கக்கூடிய ராம் திரையரங்கில் ஜகமே தந்திரம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொள்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வந்தது. இதனால் ராம் திரையரங்கை நோக்கி ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அது போல கரூர் மாவட்டத்தில் இருந்து தனுஷின் தீவிர ரசிகர் சுள்ளான் செந்தில் என்பவரும் தனுசை பார்க்க நெல்லைக்கு சென்றுள்ளார். நடிகர் தனுஸை வரவேற்பதற்காக பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு திருவிழா போன்று காட்சி அளித்தது.

ரசிகர்கள் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து அந்த இடத்திற்குப் பாதுகாப்புக்காக போலீசார் வந்தார்கள். பின் கரூரில் இருந்து வந்த சுள்ளான் செந்தில் மற்றும் அவரது நண்பர்கள் தனுஷை அசுரன் பாணியில் வரவேற்க நான்கு அடி நீளத்தில் பித்தளை வாளை வைத்து தனுஷ் நாற்பது என்று பெயரிடப்பட்ட கேக்கை வெட்ட ஆரம்பித்தார்கள். இதைப்பார்த்த காவல்துறை ஆர்வக்கோளாறு சுள்ளான் செந்திலை விதிமுறையின் மீறல் படி கேக் வெட்டி செய்ததற்காக கைது செய்தனர். மேலும், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பிறந்த நாள், திருமண நாளில் பட்டா கத்திகள் கொண்டு கேக் வெட்டும் கலாச்சாரம் தற்போது திரைஉலக விழாவிலும் ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisement