ரசிகை கேட்ட கேள்வியால் மேடையில் அசிங்கப்பட்ட ஓவியா..?

0
305
oviya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் கோலாகலமாக முடிவடைந்தது. இந்த சீசனில் வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கபட்டு அவருக்கு 50 லட்ச ரூபாய் பணமும் கோப்பையும் வழங்கபட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் சீசன் 1 வின்னரான ஆரவ் மற்றும் ஓவியா சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர்.

oviya bigg boss

சீசன் 1 நிகழ்ச்சியை பொறுத்த வரை ரசிகர்களால் மிகவும் விரும்பபட்டவர் ஓவியா மட்டும் தான். அதனால் தான் அவருக்கு இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய பெயர் இருந்து வருகிறது. கடந்த சீசனில் ஆரவ்வுடன் ஏற்பட்ட காதல் பிரச்சனையால் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேயிருந்தார் ஓவியா.

ஓவியா வெளியேறுவதற்க்கு முன்பாக மேடையில் பேசுகையில் மக்கள் என்மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி நான் வெளியே சென்றதும் கண்டிப்பாக மக்களுக்கு என்னால் முடிந்த பல உதவிகளை செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.ஆனால், இதுவரை அவர் எந்த உதவியும் செய்தது போல தெரியவில்லை.

bigg boss

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவியாவிடம் அரங்கத்தில் அமர்ந்திருந்த பெண் ரசிகை ஒருவர், போன சீசன்ல வெளியே போய் மக்களுக்கு சேவை செய்வேன்னு சொன்னீங்க. இதுவர என்ன செஞ்சீங்க..? இதுக்கப்புறம் என்ன செய்ய போறீங்க என்று நெத்தியடி கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.

இந்த கேள்வியை கேட்டதும் என்ன சொல்வது என்று ஒரு கணம் யோசித்த ஓவியா, நல்ல கேள்வி தான். நான் வெளிய போய் எல்லாருக்கும் உதவி பண்ணுவேன் என்று சொன்னது, எனக்கு ஞாபகம் இருக்கு என்னால எதுவும் செய்யமுடியல, இப்போதைக்கு நான் படத்தில் நடித்து உங்கள் அனைவரையும் என்டர்டைன் பண்ண வேண்டும் என்று மட்டும் தான் எண்ணம் இருக்கிறது.

சொல்ல முடியாது, எதிர்காலத்தில் உங்களுக்கு எதாவது உதவி செய்ய போகிறேன் என்றால் கண்டிப்பாக நான் சொல்லுவேன். ஆனால், இப்போதைக்கு நான் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். பார்க்கலாம் பிற்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்று, கண்டிப்பாக நான் இங்கு தானே இருக்க போகிறேன் என்று பதிலளித்தார் ஓவியா.