ஓவியா கையில் இருக்கும் டாட்டூவிற்கு பின்னால் இருக்கும் ரகசியம். இதற்கு முன்னாள் இந்த டாட்டூ தான் இருந்தது.

0
1225
oviya

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். அதிலும் இந்த முதல் சீசனில் பங்குபெற்ற நடிகை ஓவியா ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தார். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார் பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார் இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து. மேலும், இவருக்கு என்று சமூக வளைதளத்தில் பல்வேறு ஆர்மிக்களையும் உருவாக்கினார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி பின்னர் நடிகை ஓவியா, பாய் கட் ஹேர் ஸ்டைலில் அசத்தி இருந்தார். அதே போல இவர் எதை செய்தாலும் கொஞ்சம் வித்யாசமாக தான் செய்வார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் நடிகை ஓவியா தனது கையில் கடல் குதிரை ஒன்றின் புகைப்படத்தை டாட்டூவாக குத்திக்கொண்டு இருந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தான் ஒரு பெண்ணின் புகைப்படத்தை டாட்டூவாக குத்திக்கொண்டார் ஓவியா.

உண்மையில் அதை பலரும் ஓவியாவின் முகம் என்று தான் நினைத்து வந்தனர். ஆனால், உண்மையில் ‘கிப்ஸி கேர்ள்’ எனப்படும் ஒரு டாட்டூ தான். அதற்கு அர்த்தம் என்னவென்றால் சுதந்திரமான, பயணத்தை விரும்பும், அதிர்ஷ்டசாலியான, வாழ்க்கையில் யாரையும் நம்பி இல்லாமல் இருப்பது என்று அர்த்தமாம். அதனால் தான் அந்த டாட்டூவை குறுகிக்கொண்டு இருக்கிறார் ஓவியா.

-விளம்பரம்-
Advertisement