மும்தாஜ் பற்றி பேசிய ரசிகன்.! பிக் பாஸ் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஓவியா.?

0
432
Oviya

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. சொல்லப்போனால் ஆராவ், ஓவியாவை வைத்து தான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் என்றும் கூறலாம்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை விட தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசன் மக்களை அந்த அளவிற்கு கவரவில்லை என்பது தான் உண்மை. கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு அவரது உண்மையான குணத்திற்காக பல ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மியை கூட தொடங்கினர்.

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராகவும் வந்திருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் நடிகை ஓவியா. அவர் ட்வீட் செய்ததும் பல ரசிகர்கள் நடிகை ஓவியவிடம் பல கேள்விகளை கேட்டிருந்தனர்.

-விளம்பரம்-

அதில் ரசிகர் ஒருவர் ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் உங்களை ஈடு செய்யமுடியாது. மும்தாஜ் அவரது வழியில் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறார். ஆனால், ஓவியா ஒரு லெஜண்ட். மும்தாஜும் சிறப்பானவர் தான்’ என்று ட்வீட் செய்திருந்தார்.’

அந்த ரசிகரின் டீவீட்டிற்கு ரீ- ட்வீட் செய்திருந்த நடிகை ஓவியா’அனைவரும் நல்லவர்கள்.ஆனால் , நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதில்லை’ என்று பதிவிட்டிருந்தார். பிக் பாஸ் சீசன் 2 துவங்கிய நாளில் இருந்தே ஓவியா போன்று யாரும் வர முடியாது என்று பலரும் தெரிவித்து வந்தனர். ஆனால், கடந்த சீசனில் கதாநாயகியாக இருந்த ஓவியவே, தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை என்று தெரிவித்துள்ளது சற்று ஆச்சரியமாக உள்ளது.

Advertisement