விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். அதிலும் இந்த முதல் சீசனில் பங்குபெற்ற நடிகை ஓவியா ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தார். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாகவே மோடி அரசுக்கு எதிராக ட்வீட் போட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரிடன் ட்விட்டர் வாசி ஒருவர், மோடி அரசின் செயல்பாகள் பற்றி கேட்டிருந்தார். அதற்கு தன்னுடைய மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஓவியா, அதில் ‘என்ன பண்றது சார், எல்லாம் சிரிப்பா இருக்கு’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : கொரோனா பாதிப்புடன், கவச உடை அணிந்து வந்து தனது மனைவிக்கு அஞ்சலி செலுத்திய அருண் ராஜா – உருக்கமான வீடியோ.

Advertisement

அதே போல கடந்த ஆண்டு மோடி தமிழகம் வந்த போது ட்விட்டரில் பலரும், #GoBackModi ஹேஷ்டாக் ட்விட்டரில் பதிவிட்டனர். அப்போதும் ஓவியா, #GoBackModi என்ற ஹேஷ் டேக்கை தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் மத்திய அரசை சீண்டும் வகையில் மீண்டும் ஓவியா ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

டெல்லியில் பல்வேறு இடங்களில் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ​அந்த போஸ்டரில், மோடி ஜி, எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தீர்கள்?’ என்று கேள்வியெழுப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த போஸ்டர் விவகாரத்தில் சுமார் 25 பேரைக் கைதுசெய்தது டெல்லி போலீஸ். இதில் பெரும்பாலானவர்கள் போஸ்டர் ஒட்டும் கூலித் தொழிலாளிகள் என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது.

Advertisement

இந்தநிலையில், கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் #ArrestMeToo என்கிற ஹேஷ்டேக் கொண்டு பலரும் தரவு தெரிவிக்கத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் நடிகை ஓவியாவும் தன் பங்குக்கு, இது ஜனநாயகம்தானா?'' என்று கேள்வியெழுப்பியதோடு என்னையும் கைதுசெய்யுங்கள்” என்ற பொருளிலான #ArrestMeToo ஹேஷ்டேக்கையும் பதிவு செய்திருந்தார்.

Advertisement
Advertisement