மோடிக்கு எதிராக ஓவியா போட்ட ஹேஷ் டேக் – இன்னிக்கி அதுதான் ட்ரெண்டிங்கில் இருக்குதே.

0
1440
oviya
- Advertisement -

ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கும் மோடி பற்றிய ஹேஷ் டேக் குறித்து நடிகையும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான ஓவியா ட்வீட் செய்து இருப்பது கொஞ்சம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக #GoBackModi என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. விவசாய போராட்டம் உச்சத்தில் இருக்கும் நிலையில், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவதால் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்கு கருப்பு தினம் என்று கூறி நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் #GoBackModi ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பெரும்பாலான சினிமா பிரபலங்கள் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருக்கையில் நடிகை ஓவிய #GoBackModi என்ற ஹேஷ் டேக்கை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பிக் பாஸ் நடிகை காஜல் பசுபதியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : மோடிக்கு எதிராக ஓவியா போட்ட ஹேஷ் டேக் – இன்னிக்கி அதுதான் ட்ரெண்டிங்கில் இருக்குதே.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்குபெற்ற நடிகை ஓவியா ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தார். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார் பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார் இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து.ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பெற்ற பிரபலத்தை வைத்து இவருக்கு எந்த பட வாய்ப்பும் தேடி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement