பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பொன்னம்பலம்.! மேடையில் பெண்ணை தள்ளிவிட்ட சம்பவம்.!

0
736
Ponnambalam
- Advertisement -

இந்த வார நாமினஷன் லிஸ்டில் பொண்ணபலம், சென்றயான் ஜனனி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.இதில் பொன்னபலம் இந்த வாரம் எலிமிநெட் செய்யப்பட்டுள்ளார் என்று ஏற்கன்வே நமது வலைத்தளத்தில் தெறிவிதித்ருந்தோம். வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள் வெளிய வந்ததும் மேடையில் கமலை சந்தித்து உரையாடி பின்னர் போட்டியாளர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கும் பதிலலிப்பார்கள்.

-விளம்பரம்-

Ponnambalam-bigg-boss

- Advertisement -

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பொன்னம்பலம் மேடையில் பேசுகையில், பார்வையாளர்களில் அமர்ந்திருந்த சிலர் கேள்விகளை கேட்டுள்ளனர் அப்போது ஒரு பெண் ஒருவர் பொன்னபலித்திடம், ஐஸ்வர்யா ‘சர்வாதிகார ராணி’ டாஸ்கின் போது நீங்க அவர பண்ணது(ஐஸ்வர்யாவை பொன்னம்பலம் பின்னால் இருந்து கழுத்தை இறுக்கி பின்னர் நீச்சல் குளத்தில் தள்ளியத்தை தான் அந்த பெண் கேட்டுள்ளார்) சரியா என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: வழக்கமாக நடத்தப்படும் “Elimination” போல் இல்லாமல் புது விதமாக நடத்தப்பட்ட வெளியேற்றம்..! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.!

-விளம்பரம்-

அதற்கு பொன்னம்பலம் , கேள்வி கேட்ட அந்த பெண்ணை மேடையில் அழைத்து ஐஸ்வர்யாவின் கழுத்தை பிடித்தது போலவே அந்த பெண்ணையும் பிடித்துள்ளார். பின்னர் இது வலித்ததா என்று அந்த பெண்ணை கேட்க, அதற்கு அந்த பெண் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு பின்னர் நடிகர் கமல் அவர்கள், பொன்னபலதிடம் அதே போல செய்து’உங்களுக்கு இது வலித்ததா என்று கேட்டுள்ளார். இந்த நிகழ்வு தான் இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியின் ஹய் லைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ponambalam

இதை தவிர இன்று ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் மற்ற விடயங்கள் கொஞ்சம் ரசிகர்களுக்கு போர் அடிக்கும் விசயமாக இருக்கும். அதே போல இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பொன்னம்பலம் மேடையில் நீண்ட நேரம் பேசியது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டதாம். இவை அனைத்தும் தான் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் சுவாரசியமான நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement