அவர் எப்போ பணம் கொடுத்தார்னு எனக்கே தெரியல – அஜித் செய்த உதவி குறித்து பொன்னம்பலம் நெகிழ்ச்சி.

0
1757
ponnambalam
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவி செய்தார். மேலும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துவந்தார் கமல் .இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.

-விளம்பரம்-

கமலை தொடர்ந்து பொன்னம்பலத்திற்கு உதவிய ரஜினி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள பொன்னம்பலம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கு உடல்நிலை சரியாக இல்லை என்று முதலில் சரத்குமாரிடம் தெரிவித்ததாகவும், அவர் தான் 50,000 ரூபாயை கொடுத்து முதலில் சிகிச்சைக்கு உதவியதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது மிகவும் வறுமையில் இருப்பதாகவும். சத்யராஜ், விஜய், லாரன்ஸ், அஜித் போன்றவர்கள் தமக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பொன்னம்பலம். அதிலும் அஜித்தை தான் நான் பெரிதும் நம்பி இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். ஸ்டண்ட் யூனியனில் இருந்து தனக்கு வரவேண்டிய பணம் இன்னும் வரவில்லை என்றும் இந்த சமயத்தில் அவர்கள் எனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்தாலே போதும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் பொன்னம்பலம் அஜித் செய்த உதவி குறித்து பேசியிருக்கிறார். அதில், அமர்க்களம் படத்தின் போது என் நண்பரின் மகன் ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டது. அப்போது நான் அஜித்திடம் இதைப் பற்றி சொன்னேன். பின்னர் மதியம் அவரிடம் இதைப்பற்றி கேட்டபோது நான் எப்போதோ அவர்களுக்கு பணம் அனுப்பிவிட்டேன் என்று கூறினார். கேட்டவுடனேயே அவரது மனைவி ஷாலினியை அனுப்பி மருத்துவமனையில் பணத்தை செலுத்தி இருக்கிறார் அஜித். இதுபோல அவர் பல உதவிகளை செய்திருக்கிறார் அது எல்லாம் வெளியில் தெரியாது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement