சூப்பர் ஸ்டார் செய்த உதவி – அறுவை சிகிச்சைக்கு பின் உருக்கமான வீடியோ வெளியிட்ட பொன்னம்பலம்.

0
1183
ponnambalam
- Advertisement -

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல நடிகரான பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியானது. பொன்னம்பலம், தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் பின்னர் ஒரு இரு காட்சிகளில் நடிக்கவந்தார். பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இயக்குனர் ஹீரோ நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் வில்லன் நடிகராக நடித்து வந்தவர் நடிகர் பொன்னம்பலம் . இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவிசெய்து இருந்தார். மேலும், பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வந்தார்.

இதையும் பாருங்க : கொரோனா பாதிப்பு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமான ரோகினியின் பாசிட்டிவ் கதை.

- Advertisement -

மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட பொன்னம்பலம் எனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன், மகள் படிப்பு செலவை கமல் சார் ஏற்றுக்கொண்டார். எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார். . இந்த நிலையில், பொன்னம்பலத்திற்கு சிறுநீரக பாதிப்பு மோசமடைந்ததால் தற்போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ரூ. 2 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள பொன்னம்பலம், நடிகர் சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம். ஜெய் ஸ்ரீராம். ரொம்ப நன்றி அண்ணா. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு எனக்கு நீங்கள் அளித்த ரூ.2 லட்சம் மிகவும் உதவியாக இருந்தது. இந்த உதவியை உயிருள்ளவரை மறக்கமாட்டேன். அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் பெயரைக் கொண்ட ஆஞ்சநேயர் என்றும் உங்களை சிரஞ்சீவியாக வைத்திருப்பார். நன்றி அண்ணா என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement