குடிகார அங்கள் மாதிரி பேசிட்டு – கமலை கடுமையாக விமர்சித்த பூர்ணிமா. வைரலாகும் வீடியோ இதோ.

0
560
- Advertisement -

கமலை திட்டி விமர்சித்து பூர்ணிமா பேசிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 51 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம். தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இதனால் நிகழ்ச்சி ஆட்டம் சூடுபிடித்து இருக்கிறது. பின் உங்கள் வாழ்க்கையில் பூகம்பம் என்ற டாஸ்கை கொடுக்கிறார் பிக் பாஸ். அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பமான விஷயத்தை கூறியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் யார் வருவார்கள் என்ற ஆர்வம் ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களின் பெயர்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பூர்ணிமா நடந்திருக்கும் செயல் தான் சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது. பொதுவாகவே, பிக் பாஸ் வீட்டிற்குள் விதி மீறல்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்று தான். முதல் சீசன்லிருந்தே இந்த விதிமீறல்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த பிக் பாஸ் சீசன் 7ல் அதிகமான விதிமீறல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு முன்பு நடந்த எந்த சீசனிலும் இந்த அளவிற்கு யாரும் விதிமீறல்களை செய்ததே கிடையாது.

-விளம்பரம்-

அதில், அதிகமா மாயா- பூர்ணிமா இருவரும் விதிமீறல்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விசித்ரா- அர்ச்சனா இருவரும் விதிகளை மீறி தங்களுக்கு பிடித்ததை செய்கிறார்கள். இதை வாரம் வாரம் கமலஹாசன் தொடர்ந்து கண்டித்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சிக்குள் ரொம்ப மோசமாக தரை குறைவான வார்த்தைகளை பேசிக்கொள்கிறார்கள். போட்டியாளர்களுக்குள்ளே தரைகுறைவாக பேசிக்கொள்வது பொதுவான ஒன்றாக இருந்தாலும் தற்போது கமலஹாசனையே விமர்சித்து திட்டி பேசி இருக்கிறார்கள்.

அதாவது, நேற்று நிகழ்ச்சியில் விக்ரம்- பூர்ணிமா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் கமலஹாசன் தன்னை வளைத்து வளைத்து கேள்வி கேட்டது குறித்து ஆதங்கத்துடன் பூர்ணிமா பேசுகிறார். பின் அவர், கமலை குடிகார அங்கிள் என்று மோசமாக பேசுகிறார். இதை தான் ரசிகர்கள் தற்போது கட் செய்து வைரலாக்கி வருகிறார்கள். இது தொடர்பாக இந்த வார இறுதியில் கமல் என்ன செல்ல போவார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement