பாலாஜியை ஓவியவுடன் ஒப்பிட்ட அதர்வா பட இயக்குனர் – ரசிகர்களின் கமென்டை பாருங்க.

0
1085
bala

பிக் பாஸ் வீட்டில் தற்போது அர்ச்சனாவிற்கும் பாலாஜிக்கும் இடையிலான பிரச்சனை தான் மிகவும் கொழுந்துவிட்டு எரிகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் அர்ச்சனா, பாலாஜியை குழந்தை என்று குறிப்பிட்டபோது கடுப்பான பாலாஜி நீங்கள் என்னை குழந்தை என்று கூப்பிட வேண்டாம் என்று கூறியிருந்தார். அதேபோல இனிமேல் தன்னை யாரும் வாடா போடா என்று அழைக்க வேண்டாம் என்றும் அனைவர் முன்பும் பேசி இருந்தார் பாலாஜி.நேற்றைய நிகழ்ச்சியில் கிளீனிங் டீமில் இருந்த பாலாஜி தூங்கிக் கொண்டிருந்த போது அவரை வீட்டை பெருக்க மீனிங் டீமில் இருந்த வேல்முருகன் அஜித் ஆகியோர் எழுப்பினார்கள் அப்போது பாலாஜி தூக்கத்தில் எழுப்பி வேலை செய்ய செல்வது சரியான விஷயம் இல்லை என்று கூறியிருந்தார். அர்ச்சனா, பாலாஜியை அழைத்து வரவில்லையா என்று கேட்க பின்னர் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பாலாஜி வேலை செய்தார். இதனால் அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.

This image has an empty alt attribute; its file name is 1-167-1024x898.jpg

அப்போது பாலாஜி கேப்டனாக இருந்தால் என்ன கொம்பு முளைத்து விடும் ஒருவர் உடல்நிலை முடியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களை எழுப்பி வேலை வாங்குவீர்களா அடுத்த வாரம் நான் கேப்டனாக வந்தால் அனைவரையும் அம்மி அரைக்க விடுகிறேன் என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான மற்ற போட்டியாளர்கள் பாலாவிடம் வாக்குவாதம் செய்தார்கள். அதிலும் குறிப்பாக ரியோ மற்றும் அர்ச்சனா பாலாஜியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அர்ச்சனா, பாலாஜியிடம் ‘நான் தான் இந்த வீட்டின் கேப்டன். இன்னும் 4 நாட்கள் உங்களுக்கு புடிக்கிதோ இல்லையோ நீங்க செஞ்சி தான் ஆகணும்’ என்று கடமையாக பேசி இருந்தார்.

- Advertisement -

அர்ச்சனா மட்டுமல்லாது உடன் இருந்த ரியோ கூட பாலாஜியை கார்னர் செய்தார். இதையடுத்து பாலாஜி, தனிமையில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தார். இது நாள் வரை வீட்டில் கெத்தாக இருந்த பாலாஜியையே அழ வைத்து விட்டார்கள் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.இப்படி ஒரு நிலையில் பாலாஜி முருகதாஸ் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்து இருக்கிறது. பாலாஜி முருகதாஸ் என்று ஹேஷ் டேக்கை பதிவிட்டு ரசிகர்கள் பலர் பாலாஜிக்கு ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.இப்படி ஒரு நிலையில் இயக்குனர் ஒருவர் பாலாஜியை நடிகை ஓவியாவுடன் ஓப்பிட்டு ட்வீட் செய்திருக்கிறார்.பாலாஜியை ஓவியவுடன் ஒப்பிட்ட அதர்வா பட இயக்குனர் – ரசிகர்களின் கமென்டை பாருங்க.

என்னதான் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசனை கடந்தாலும் ரசிகர்களுக்கு இன்னமும் மனதில் நீங்காத சீசன் என்றால் அது முதல் சீசன் தான். அதிலும் இந்த சீசனில் பங்குபெற்ற ஓவியாவிற்கு நிகரான ரசிகர்கள் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாருக்கும் உருவாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ஓவியாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. இப்படி ஒரு நிலையில் பாலாஜி முருகதாசை ஓவியாவுடன் ஒப்பிட்டு இருக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன். இவர் தமிழில் டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, 100, கூர்கா போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பாலாஜி முருகதாசுக்கு ஆதரவாக ட்விட்டரில் பலர் பல பதிவுகளை போட்டு வரும் நிலையில் தற்போது இவரும் தன் பங்கிற்கு பாலாஜி ஆதரவாக டுவிட் ஒன்றை வைத்திருந்தார். அதில் பிக் பாஸ் தமிழ் குறித்து எந்த ஒரு பதிவையும் போடாமல் இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால், உண்மையில் ஓவியாவிற்கு பின்னர் இந்த பாலாஜியை நான் விரும்பத் தொடங்கி விட்டேன். இந்த நபர் இதுவரை மிகவும் நேர்மையாகவும் தைரியமாகவும் மூஞ்சிக்கு நேராக பேசி விடுகிறார் அதை நான் விரும்புகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement