இப்போ தெரியுதா இங்க யார் குரூப்பீசம் பண்றாங்கனு – ரசிகர்களுக்கு தாமஸ் காட்டும் அர்ச்சனா.

0
1987
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இருக்கிறது.இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். கடந்த வாரம் நோமினேஷனில் சோம் ,கேப்ரில்லா,ஜித்தன் , நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தார்கள். . எனவே, கடந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் நிஷாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருந்தது. ஆனால், 12 போட்டியாளர்கள் அப்படியே இருந்தார்கள். 12 பேர் இருந்தும் நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடவில்லை. அதற்கு முக்கிய காரணமே அர்ச்சனாவின் லவ் பேட் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் 2 எவிகஷன் செய்து லவ் பெட்டின் உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ்ஷை வெளியேற்றி இருந்தார். அதே போல நேற்றய நிகழ்ச்சியில் நிஷா வெளியேறினார். ஒரே சமயத்தில் தங்களது குரூப்பை சேர்ந்த 2 பேர் வெளியேறியதால் அர்ச்சனா குழு கடும் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியது. அதிலும் இந்த வாரம் 10 பேர் மட்டும்தான் இருப்பதால் ஓபன் நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. இதில் பெரும்பாலானோர் ஆரி மற்றும் அனிதாவின் பெயரை கூறியிருந்தார்கள். இரண்டாவது ப்ரோமோவில் ரியோவை அனிதா ஏதோ கேள்வி கேட்க அதற்கு நிற்காமல் சென்று விடுகிறார். இதனால் அனிதா ஏன் செல்கிறீர்கள் பேசுவதற்கு தைரியம் இல்லையா என்று கேட்க இதனால் கடுப்பான ரியோ இந்த வார்த்தையெல்லாம் வெச்சுக்காதீங்க, பார்த்து பேசுங்க என்று கடுப்பாகி இருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது ப்ரோமோவில் நாமினேஷன் முடிந்த பின்னர்ஆரி, பாலாஜி, ரம்யா அனிதா ஆகிய 4 பேரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல அர்ச்சனா குழுவும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் பேசிய அர்ச்சனா யார் யாரை நாமினேட் செய்தது என்று ரியோவிடம் கேட்டுட்டுவிட்டு இங்கே யார் குரூப்பீசம் செய்கிறார்கள் நம்பர் கேம் யார் விளையாடுகிறார்கள் என்று தெரிகிறதா என்று புலம்பி உள்ளார். இதை வைத்து பார்க்கவும் போது இந்த வாரம் அர்ச்சனா நாமினேஷனில் வந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement