நான் நிமிர்த்தி விடுவேன். கண்டிப்பாக நான் கேட்பேன் – பழைய கமல் வந்துட்டாருப்பா.

0
3389
kamal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து 11வது வாரத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். கடந்த வாரம் நோமினேஷனில் சோம் ,கேப்ரில்லா,ஜித்தன் , நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தார்கள். எனவே, கடந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் நிஷாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.

-விளம்பரம்-

எனவே, அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறை டபுள் ஏவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருந்தது. ஆனால், 12 போட்டியாளர்கள் அப்படியே இருந்தார்கள். 12 பேர் இருந்தும் நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடவில்லை. அதற்கு முக்கிய காரணமே அர்ச்சனாவின் லவ் பேட் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் 2 எவிகஷன் செய்து லவ் பெட்டின் உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனவே, இந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த வாரம் ஆஜீத் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உறுதியான தகவல் இன்னும் சில நேரத்தில் வெளியாகிவிடும்.

இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் ஏற்பட்ட விதிமீறல்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அர்ச்சனா ஏதோ சொல்ல தனி நபருக்காக விதிமுறைகளை வளைக்க முடியாது அப்படி வளைத்தால் நான் நிமிர்த்தி விடுவேன். கண்டிப்பாக நான் கேட்பேன் என்று கமல் கொஞ்சம் கோபமாக பேசி இருக்கிறார். இன்று வெளியான முந்தைய ப்ரோமோவிலும் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவையும் பார்க்கும்போது இன்றைய நிகழ்ச்சியில் அர்ச்சனாவை கமல் வறுத்தெடுத்து இருக்கிறார் என்பது போலத்தான் தெரிகிறது

-விளம்பரம்-
Advertisement