விஜய் டிவியில் ஒளிபரபாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ப்ரோமோ வீடியோவில் கேட்கும் குரல் மக்களுக்கு மிகவும் பரிட்சியமான ஒரு குரலாக இருந்து வருகிறது. “பிக் பாஸ் தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்” என்ற Promo-வில் கம்பீரமான குரலுக்கு பின்னால் இருக்கும் அவரது முகத்தை இதுவரை பெரும்பாலானோர் கண்டதில்லை.

Advertisement

அந்த பிரம்மாண்ட குரலுக்கு சொந்தக்காரரின் பெயர் கோபி நாயர்.கோயம்பத்தூரை சேர்ந்த இவர் 2000 ஆம் ஆண்டு வேலை தேடி சென்னை வந்துள்ளார். முதலில் இயக்குனராக வர வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்த இவருக்கு, இவரது குரல் வளத்தை கண்டு டப்பிங் ஆர்டிஸ்டாக வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வந்த இவருக்கு விஜய் டிவியில் டப்பிங் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர் முதன் முதலில் ‘காவியஞ்சலி’ என்று தொடருக்கான ப்ரோமோ விடீயோவிற்கு டப்பிங் பேசியுள்ளார்.பின்னர் இவரது குரல் பிடித்து போக விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளின் ப்ரோமோகளுக்கு இவரது குரலையே தேர்வு செய்துள்ளனர். அதோடு விஜய் அவார்ட்ஸின் போது ஒவ்வொரு கலைஞருக்கும் விருது வழங்கும் முன் அவர்களுக்கான AVஒளிப்பதும் இவரது குரலாக தான் இருந்து வருகிறது.

Advertisement

Advertisement

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வரும் கோபி, பல குரல்களில் டப்பிங் செய்யும் திறமை கொண்டவராக இருந்து வருகிறார். டிஸ்கவாரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான ‘மேன் வெர்சஸ் வைல்ட் ‘ நிகழ்ச்சியில் பேர் க்ரில்ஸ் குரலுக்கு சொந்தக் காரரும் இவர் தான். ஆனால், இத்தனை குரலில் பேசும் இவர் தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்கரரே என்று தெரியவில்லை. அந்த விடயத்தை மட்டும் விஜய் டிவி இரண்டு சீசன்களாக ரகசியமாகவே வைத்து வருகிறது

Advertisement