Quota Queency என்று குயின்சியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் Memes தொகுப்பு இதோ.

0
492
Queency
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஆறாவது எவிக்ஷனில் வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 47 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, செரீனா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத பல போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள். அதில் ஒருவர் தான் குயின்சி. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர்.

- Advertisement -

இவர் மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின்பு ஆல்பம் சாங்ஸ், கவர் சாங்ஸ் போன்றவை மூலம் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் குயின்சி. அது மட்டும் இல்லாமல் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் அன்பே வா தொடரிலும் குயின்சி நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவரது வசீகர தோற்றதால் இவருக்கு ரசிகர்கள் கூடினார்கள்.

ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வரும் விதத்தை பார்த்து இவரை மிச்சர் லிஸ்டில் சேர்த்துவிட்டனர் ரசிகர்கள். அதுவும் இவர் பிக் பாஸ் வீட்டில் தூங்குவது, சாப்பிடுவது, வேலை செய்யாமல் இருப்பது என்று தான் இருக்கிறார் என்று பலர் கேலி செய்து வருகின்றனர். அதே போல தனக்கு சிக்கன் வேண்டும் என்று பிக் பாஸிடம் இவர் கேட்க அதனை பிக் பாஸ் அனுப்பி வைத்ததில் இருந்தே இவரை கோட்டா குயின்சி என்று பலரும் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதிலும் இவர் தூங்கினால் நாய் குலைக்க கூடாது என்று பிக் பாஸிடமே முறையிட்டார். இதனால் இவரை நெட்டிசன்கள் பலரும் சமூக வளைத்ததில் வறுத்தெடுத்து வருகின்றனர். இவரை Troll செய்து பல விதமான மீம்கள் ட்விட்டரில் குவிந்த வண்ணம் இருக்கிறது. மேலும், குயின்சி தனது PR டீமினால் தான் இத்தனை வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியாறாமல் காப்பாற்றப்பட்டு வருகிறார் என்று நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர்.

பொதுவாக பிக் பாஸில் பங்குபெறும் போதிதயாளர்களுக்கு ஆதரவாளர்களும் இருப்பார்கள் , ஹேட்டர்ஸ்களும் இருப்பார்கள். மேலும், பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலரும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக தங்களை பற்றி பதிவுகளை போடா PR டீம்களை அமைத்துவிட்டு தான் செல்வார்கள். ஆனால், இந்த சீசனில் தான் Prகள் பற்றி ஓபனாகவே போட்டியாளர்கள் பேசி வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட நிகழ்ச்சிக்கு வருவதற்காக ராம் ராமசாமி 10 லட்சம் வரை செலவு செய்ததாக கூறி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் மணிகண்டன், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று கூற அதற்க்கு குய்ன்ஸி ‘இது உனக்கே ஓவரா தெரியல என்னுடைய டீம் உனக்காகத்தான் வெளியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ குயின்சி பிக் பாஸ் வீட்டில் எதுவும் செய்யவில்லை என்றாலும் அவரை அவரது PR டீம் தான் காப்பற்றி வருகிறது என்று நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர். அத்திமட்டுமல்லாமல் ஒரு படி மேலே போய் குயின்சியை ஜூனியர் ஜெயலலிதா என்றெல்லாம் ஒப்பிட்டு குயின்சி PRகள் போட்ட பதிவுகளை கண்டு பிக் பாஸ் ரசிகர்கள் காண்டாகிவிட்டனர்.

இதனாலேயே குயின்சியை கோட்டா குயின்சி என்று கேலி செய்து பல விதமான மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க குயின்சியை கலாய்க்கும் ட்விட்டர் கணக்குகளை அவரது PR டீம்கள் report கொடுத்து முடக்குவதாகவும் நெட்டிசன்கள் சிலர் கூறிவருகின்றனர். இப்படி PR டீம்களை வைத்து குயின்சி எத்தனை வாரங்கள் நிலைத்து இருக்க முடியும் என்பதே ரசிகர்கள் பலரின் கேள்வி.

Advertisement