ஒரே வார்த்தையில் விஜய், அஜித்,விக்ரம், சூர்யாவின் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கடுப்பேற்றிய ரைசா.

0
1273
raiza
- Advertisement -

தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. என்னதான் 3 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர்.2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகு தான் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ரைசா அவர்கள் 2018 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது ஆலிஸ் என்ற படத்திலும் ஜி வி பிரகாஷ் நடித்து வரும் காதலிக்க நேரமில்லை என்ற படத்திலும் நடித்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் #love என்ற புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளார். மேலும், இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறார் ரைசா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி ரசிகர்களுடன் கேள்வி பதிலில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் சொன்ன ஒரு பதில் பலரையும் கடுப்பேற்றி உள்ளது.

பொதுவாக அணைத்து பிரபலங்களும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் லைவ் சாட்டிங்கில் வந்து ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது வழக்கம். அப்படி வரும் போது தமிழில் டாப் நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம்,தனுஷ் போன்ற ரசிகர்கள் தங்களது ஹீரோக்களை பற்றி ‘ஒரு வார்த்தை’ சொல்லுங்க என்று கேட்பதும் அதற்கு பிரபலங்கள் பதில் அளிப்பது வழக்கம்.

-விளம்பரம்-

அந்த வகையில் நடிகை ரைசாவும் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி கொண்டு இருக்கும் போது விஜய்,,அஜித், தனுஷ் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் அவரவர் ஹீரோக்களை பற்றி ‘OneWord ‘ சொல்லுங்க என்று கேட்டதற்கு அனைவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துவிட்டார் ரைசா. ரைசாவின் இந்த சாமர்த்தியத்தை கண்டு சிலர் வியந்தாலும். ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பில் ஆழ்ந்து உள்ளனர்.

Advertisement