பாலா படத்தில் நடிக்கப்போகும் பிக்பாஸ் போட்டியாளர்..! நடிகைக்கு அடித்த அதிஷ்டம்.!யார் தெரியுமா..?

0
293
Bala

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தனர். அந்த வகையில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ஜூலி, ஆரவ், ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகை ரைசா தான். தற்போது இவர் பாலா படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பெங்களூரு மாடல் அழகியான ரைசா , பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெறுவதற்கு முன்னாள் ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் தொடரில் கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு தனுஷ் நடித்த ‘வி ஐ பி ‘ படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வரவேற்பை கண்டு ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் ரைசா.

இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகியுள்ள ‘வர்மா’ என்ற புதிய படத்தில் நடிகை ரைசா ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இதுகுறித்து சமீபத்தில் கூறியுள்ள ரைசா, இயக்குனர் பாலா படத்தில் நடிப்பதற்காக அழைப்பு வந்த போது பாலா படத்தில் வாய்ப்பா என்று ஆச்சர்யமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

பொதுவாக பாலா படம் என்றாலே அவர் நடிகர்களை பிழிந்தெடுத்து விடுவார், அவர் ரொம்ப ஸ்ட்ரிட் என்று பலரும் நினைத்து வருகின்றனர். அதே போல நடிகை ரைசாவிற்கும் , இயக்குனர் பாலாவை சந்திக்கும் போது பயமாக இருந்தது என்றும் ஆனால், அவரை சந்தித்த பின்னர் அவர் மிகவும் அமைதியாக இருக்கும் நபர் என்று புரிந்துகொண்டதாக நடிககை ரைசா தெரிவித்துள்ளார்.