விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர். நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர். மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர்.
அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். அதுமட்டும் இல்லாமல் ரைசா அவர்கள் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் மேலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார்.இதனைத்தொடர்ந்து ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார்.
அதன் பின்னர் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அடிக்கடி எதாவது பதிவிட்டு சிக்கலில் சிக்கிவிடுகிறார். சமீபத்தில் பிரபல நட்சத்திர தம்பதியான விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தங்களது குழந்தையுடன் வெளியில் சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதில், அனுஷ்கா ஷர்மா குழந்தையை தூக்கி செல்ல, அவருக்கு பின்னால் பேபி சிட்டரை கோலி சுமந்து சென்றார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும், இதுகுறித்து பல்வேறு மீம்கள் கூட வெளியானது. இப்படி ஒரு நிலையில் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரைசா, அனுஷ்கா சர்மா நம் நாட்டின் ஒரு முழு பகுதியையும் புரட்சிகரமாக்கிவிட்டார் என்று பதிவிட்டு இருந்தார். ரைசாவின் இந்த பதிவை பார்த்த பலர் பெற்ற குழந்தையை ஒரு தாய் தூக்கி செல்வது என்ன புரட்சி என்று கழுவி ஊற்ற, அந்த டீவீட்டை நீக்கிவிட்டார் ரைசா.
ட்விட்டர் வாசிகள் மட்டுமல்லாமல் ஒரு சில பிரபலங்கள் கூட ரைசாவின் நீக்கிய பதிவை போட்டு விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியலில் நடித்த சரண்யா, ரைசாவின் அந்த பதிவை பகிர்ந்து ‘இவை எல்லாம் பஸ் ஸ்டான்டில் கூட நடக்கும் ஒரு சாதாரண விஷயம் தான், பணக்காரர்கள் செய்யும் சாதாரண விஷயத்தை பெரிதாக காட்ட வேண்டாம் ‘என்று பதிவிட்டுள்ளார்.