ரைசா தனது காதலர் யார் என்பதை நாளை அறிவிக்க போகிறாரா ? மாறி மாறி விடீயோவை வெளியிட்ட பிரபலங்கள்.

0
1948
raiza
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை மூன்று சீசன்கள் கடந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்தது என்னவோ பிக் பாஸ்ஸின் முதல் சீசன் தான். பிக் பாஸ்ஸின் முதல் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2 படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.மேலும் , பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மற்றுமொரு போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன், ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : நேற்று கோபத்தில் விஜய் சேதுபதி சொன்னதை படத்தின் டைட்டிலாக ரெஜிஸ்டர் செய்ய சொன்ன இயக்குனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் ஜி வி பிரகாஷுடன் ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் ரைசா. அது போக ரைசா, ஆலிஸ் என்ற படத்தில் நடிகை ரைசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை ரைசாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஜி வி பிரகாஷ், விஷ்ணு விஷால் போன்றவர்களின் புகைபடங்களை பதிவிட்டு, சில ஹாட்டான கேப்ஷன்களை செய்திருந்தார்.

-விளம்பரம்-

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜி வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ரைசா, தான் யாரை காதலிக்கிறேன் என்று கூடிய விரைவில் கூறப்போவதாகவும் அது யாராக இருக்கும் என்றும் கேட்டுள்ளார். நாளை காதலர் தினம் கொண்டாட பட உள்ள நிலையில் ஜி பிரகாஷ் இப்படி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். ஜி வி மட்டுமல்லாமல் ஓவியா, நிஷா என்று பலரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

Advertisement