நேற்று கோபத்தில் விஜய் சேதுபதி சொன்னதை படத்தின் டைட்டிலாக ரெஜிஸ்டர் செய்ய சொன்ன இயக்குனர்.

0
50439
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரை அதிகம் மக்கள் செல்வன் என்று தான் அழைக்கிறார்கள். விஜய் சேதுபதியின் நடிப்பும், பேச்சும் இயல்பாகவே இருக்கும். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே வேற லெவல் தெறிக்க விட்டது. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இந்நிலையில் தற்போது இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திலும் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது மாஸ்டர் படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக விஜய்யை அழைத்து சென்றார்கள். பின் இந்த பிரச்சனை சமூக வலைத்தளங்களில் எரிமலை போல் வெடித்தது. இதனால் பலரும் பலவிதமாக சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

- Advertisement -

இதை பார்த்து கோபமடைந்த விஜய் சேதுபதி அவர்கள் நேற்று “போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று மிகவும் ஆவேசத்துடன் குறிப்பிட்டு இருந்தார். மேலும், முதன் முதலாக விஜய் சேதுபதி பதிவிட்ட கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் பதிவிட்ட கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. விஜய் சேதுபதி அவர்கள் பதிவிட்ட கருத்தை பார்த்து சினிமா பிரபலங்கள் பல பேர் அவருக்கு வாழ்த்துகளையும், பாசிட்டிவாக கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதை பார்த்த தமிழ்ப்படத்தின் இயக்குனர் அமுதன் அவர்கள் இதை தன்னுடைய தயாரிப்பாளர் சசிகாந்த் இடம் இந்த தலைப்பை முதலில் ரெஜிஸ்டர் பண்ணி வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இப்படி விஜய் சேதுபதி அவர்கள் கோபத்தில் சொன்ன வார்த்தையை இயக்குனர் தற்போது படத்தின் டைட்டிலாக வைக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பலவிதமாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தற்போது விஜய் சேதுபதி அவர்கள் பதிவிட்ட கருத்து தான் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.

-விளம்பரம்-
Advertisement