நான் என்ன பார்க்கிறேன் என்று தெரிகிறதா. ரைசா புகைப்படத்திற்கு ரசிகர்களின் கமெண்டை பாருங்க.

0
25703
raiza
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு நபர்களுக்கு சினிமாவில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது அந்த வகையில் முதல் சீசனில் பங்கேற்ற பெரும்பாலானோர் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள் ஆனால் முதல் சீசனில் பங்குபெற்ற பெண் போட்டியாளர்களில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகை ரைசா தான். மாடல் அழகியான ரைசா தமிழில் அறிமுகமான தனுஷ் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற படத்தின் மூலம் தான்.

-விளம்பரம்-

அந்த படத்தில் காஜலின் குமாஸ்தாவாக நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப் பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தித் தந்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஹரிஷ் கல்யாண் உடன் இவர் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அதிலும் இந்த திரைப்படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாவதாக இருந்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரைசா.

இதையும் பாருங்க : பிரபல சீரியல் நடிகை குட்டி பூஜாவ ஞாபம் இருக்கா. இப்போ எப்படி இருக்கார்? என்ன செய்கிறார்.

- Advertisement -

ஆனால், அந்த திரைப்படம் முழுவதும் எடுக்கப்பட்டு பின்னர் சில பிரச்சினை காரணமாக கைவிடப்பட்டது. இருப்பினும் ரைசாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது காதலிக்க நேரமில்லை, எஃப்ஐஆர் ஆலிஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார் ரைசா. அதிலும் குறிப்பாக ஆலிஸ் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார் ரைசா. மாடல் அழகி என்பதால் நடிகரை அடிக்கடி போட்டோ சூடுகளை நடத்துவது வழக்கம் அதிலும் தற்போது நடிகையாக இருக்கும் போதும் தொடர்ந்து தனது மாடலிங் பணியை தொடர்ந்து வரும் ரைசா தற்போதும் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

அதிலும் இவர் பதிவிடும் புகைப்படங்கள் பெரும்பாலும் கவர்ச்சியாகத் தான் இருக்கிறது அதே போல இவரை சமூகவலைதளத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் நடிகை ரைசா ஈர உடைகளில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மேலும், அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் அள்ளி வீசுகிறார். அதில் ஒரு புகைப்படத்தை பதிவிட்ட ரைசா ‘நான் என்ன பார்க்கிறேன், அதை நீங்களும் பார்க்கிறீர்களா என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நாங்கள் என்ன பார்க்கிறோம் என்று உங்களுக்கு தெரிகிறதா என்று இரட்டை வசனத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்தில் ரைசா கவர்ச்சியாக இருப்பதைத்தான் ரசிகர்கள் இப்படி குறிப்பிட்டு வருகிறார்கள். மேலும், இந்த படத்தை கண்டு பல ரசிகர்களும் ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement