பிரபல சீரியல் நடிகை குட்டி பூஜாவ ஞாபம் இருக்கா. இப்போ எப்படி இருக்கார்? என்ன செய்கிறார்.

0
144809
kutty-pooja
- Advertisement -

சின்னத்திரை சீரியல் நடிகை குட்டி பூஜாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கா??? வாங்க சீரியல் நடிகை குட்டி பூஜா இப்ப என்ன பண்றாங்கன்னு? அவங்கள பத்தி பார்க்கலாம். குட்டி பூஜா 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஓளிபரப்பான ‘அண்ணாமலை’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர். இவரின் முதல் சீரியலிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், பூஜாவை அதிகம் ‘குட்டி பூஜா’ என்று தான் அனைவரும் அழைப்பார்கள். ஏன்னா, நடிகை பூஜா சின்னத் திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது பயங்கர சேட்டையும், குறும்புத்தனமும் செய்வாராம். இதனால் தான் இவருக்கு குட்டி பூஜா என்றும் பெயர் வைத்தார்களாம். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். உண்மையிலேயே குட்டி பூஜாவுக்கு நடனம் என்பதே தெரியாதாம். ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மூலம் தன் நடனத்தை கற்றுக் கொண்டார் என்றும் கூறினார். அதுமட்டும் இல்லாமல் அந்த நடன நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் நம்ம குட்டி பூஜா தான்.

-விளம்பரம்-
Image result for kutty pooja"

- Advertisement -

இதனைத் தொடர்ந்து குட்டி பூஜாவுக்கு பல சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும்,இவர் சன் டிவியில் ஓளிபரப்பான ‘அழகி, முந்தானை முடிச்சு’ போன்ற சீரியலில் நடித்து வந்தார். இப்படி சீரியலில் குட்டி பூஜா பிசியாக இருக்கும் போது அவர் வீட்டில் கல்யாணம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். உடனே அவருக்கு மாப்பிள்ளையும் பிக்ஸ் ஆகி விட்டது. அதனால் குட்டி பூஜா சீரியலுக்கு குட்பை சொல்லி விட்டு திருமணம் செய்து கொண்டார். குட்டி பூஜாவின் கணவர் பெயர் மது. அதன் பிறகு குட்டி பூஜா அவர்கள் தன் கணவருடன் கனடா நாட்டில் செட்டிலாகி விட்டார். அதுமட்டும் இல்லாமல் குட்டி பூஜாவும் அவரது கணவர் மதுவும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டதாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார்கள்.

இதையும் பாருங்க : நான் அவரை காதலிக்கிறேன். திருமணம் குறித்து பேசிய நடிகை நிக்கி கல்ராணி.

அதுமட்டும் இல்லாமல் கனடாவில் இருக்கும் தமிழ் ரசிகர்கள் குட்டி பூஜாவை பார்க்கும் போது ‘நீங்க தானே குட்டி பூஜா’ என்று கேட்கும் போதெல்லாம் இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறார்களா!! என்று சந்தோஷப்பட்டு வருவதாக அவர் கூறி இருந்தார். அந்த அளவிற்கு சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில் இவர்களுக்கு தற்போது இரண்டு இளவரசிகள் இருக்கிறார்கள். மேலும்,முதல் குழந்தைக்கு 9 வயதாகிறது. இரண்டாவது குழந்தைக்கு இரண்டு வயது ஆகிறது. அதோடு முதல் பெண்ணுக்கு நீச்சல்,படம் வரைத்ததில் அதிக ஆர்வம் உடையவராம்.

-விளம்பரம்-
Image result for kutty pooja"

அதுமட்டுமில்லாமல் அவளுக்கு இப்போது இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருக்கிறது என்றும் மேலும்,அவள் விருப்பப்பட்டால் சினிமாவில் நடிக்க நாங்கள் அனுமதிப்போம் என்றும் குட்டி பூஜா கூறியிருந்தார். இதுமட்டும் இல்லாமல் குட்டி பூஜா டிவியில் ஓளிபரப்பாகும் தொடர்களில் நடிக்க வில்லை என்றாலும் கனடாவில் ஒரு டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும், வி.ஜே.வாகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் சீரியல்களில் நடிக்க வில்லை என்றாலும் கனடாவிலிருந்து தமிழ் சீரியல்கள் எல்லாம் பார்ப்பதாகவும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிமை என்றும் கூறியிருந்தார்.

Advertisement