‘என் பெற்றோர்கள் புதுமண தம்பதியாக இருந்த போது’ பெற்றோர்களின் அறிய புகைப்படத்தை பதிவிட்ட ரைசா.

0
10730
Raiza
- Advertisement -

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகை ரைசா வில்சனிற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் நடிகை ரைசா வில்சன் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இது தான் நடிகையாக ரைசா வில்சன் அறிமுகமான முதல் படமாம். 2017-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் நடிகை ரைசா வில்சனும் ஒரு போட்டியாளராக இருந்தார்.

இதையும் பாருங்க : பீச்சில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட பிரியதர்ஷினி. வைரலாகும் #Throwback புகைப்படம்.

- Advertisement -

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு நடிகை ரைசா வில்சனிற்கு அடித்தது லக். ஆம்.. ஹீரோயினாக நடிக்க ரைசா வில்சனிற்கு ஒரு அருமையான வாய்ப்பு வந்தது. அந்த படம் தான் ‘பியார் பிரேமா காதல்’. இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் இளன் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.

-விளம்பரம்-

இந்நிலையில், நடிகை ரைசா வில்சன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் ரைசாவிற்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இப்புகைப்படத்தில் ரைசா வில்சனின் அப்பாவும், அம்மாவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணமான போது எடுத்த புகைப்படமாம் இது. இப்போது, ‘ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, FIR, ஹேஸ் டேக் லவ்’ என அடுத்தடுத்து நான்கு தமிழ் படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகை ரைசா வில்சன்.

Advertisement