மீடியா துறையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ப்ரியதர்ஷினி. இவர் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் ‘தாவணிக் கனவுகள், இதய கோயில்’ மற்றும் மலையாளத்தில் ‘சுப யாத்ரா’ ஆகிய மூன்று படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்திருந்தார் ப்ரியதர்ஷினி. இதனைத் தொடர்ந்து தமிழில் ரகுமானின் ‘கல்கி’ என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார் ப்ரியதர்ஷினி. அதன் பிறகு ‘ஜித்தன்’ ரமேஷின் ‘புலி வருது’, பரத்தின் ‘காளிதாஸ்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களிலும் நடித்தார். இதில் ‘காளிதாஸ்’ படத்தினை அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் ப்ரியதர்ஷினி மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. திரைப்படங்கள் மட்டுமின்றி ‘அக்னிப் பரீட்சை, எத்தனை மனிதர்கள், விழுதுகள், கனவுகள் இலவசம், கோலங்கள், வசந்தம், மை டியர் பூதம், ரேகா IPS, தமிழ் கடவுள் முருகன்’ என பல டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார் ப்ரியதர்ஷினி.
இதில் ‘கோலங்கள்’ என்ற டிவி சீரியல் ப்ரியதர்ஷினிக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த சீரியலில் ஹீரோயினாக பிரபல நடிகை தேவயாணி நடித்திருந்தார். இதில் ப்ரியதர்ஷினி ‘வித்யா’ என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார். இந்த சீரியலை இயக்குநர் திருச்செல்வம் இயக்கியிருந்தார். தற்போது, ‘ஹாட் & கூல் மீடியா’ என்ற யூ-டியூப் சேனலில் தொடர்ந்து திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார் ப்ரியதர்ஷினி.
உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், ப்ரியதர்ஷினி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான தனது ஸ்டில்ஸை ஷேர் செய்துள்ளாராம். பீச்சில் அரைகுறை ஆடையில் ப்ரியதர்ஷினி கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.