விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது நான்காவது சீசனும் ஒளிபரப்பாகி வருகிறது. என்னதான் 4 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர். நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர். மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர்.
அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். அதுமட்டும் இல்லாமல் ரைசா அவர்கள் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் மேலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார்.இதனைத்தொடர்ந்து ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார்.
அதற்குப் பிறகு தான் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல ரசிகர் பட்டாளங்கள் குவிந்தது. பிக் பாஸுக்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ரைசா 2018 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தற்போது ஆலிஸ் என்ற படத்திலும் ஜி வி பிரகாஷ் நடித்து வரும் காதலிக்க நேரமில்லை என்ற படத்திலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.