அட கொடுமையை ‘இரண்டாம் குத்து’ இயக்குனர் படத்தில் கமிட் ஆன ரைசா. ஹீரோ யார் தெரியுமா ?

0
3704
raiza
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர்.2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-
Image

அதன் பின்னர் இவர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் நாயகியாக நடிக்கவில்லை. இருப்பினும் பல்வேரு படங்களில் நாயகியாக நடித்து வரும் ரைசா, தற்போது சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இவர் வேறு யாரும் இல்லை தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் இரண்டாம் குத்து ஆகிய படங்களை இயக்கியவர் தான்.

இதையும் பாருங்க : தெலுங்கில் சொட்ட சொட்ட நனைந்த வெள்ளை உடையில் படு கிளாமராக நடித்துள்ள சன் டிவி சீரியல் நடிகை.

- Advertisement -

இந்த இரண்டு படங்களுமே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் இரண்டாம் குத்து படத்தை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு திரை பிரபலங்கள் கூட கண்டனம் தெரிவித்தனர். இப்படி ஒரு நிலையில் இவர் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இதில் நாயகனாக பிரபு தேவா நடிக்க வரலக்ஷ்மி மற்றும் ரைசா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.

ஏற்கனவே இவர் இயக்கிய இரண்டு படங்களும் டபுள் மீனிங் மற்றும் ஆபாச காட்சிகள் தூக்கலாக இருந்தது. இந்த படத்தை இவர் எப்படி எடுக்கப்போகிறார், என்ன பிரச்சனை காத்துகொண்டு இருக்கிறது என்பது தான் தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்க. சந்தோஷ் ஜெயக்குமார் மீண்டும் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கும் Mr.Virgin என்று சர்ச்சையான தலைப்பை வைத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement