சச்சினுக்கு ஒரு நியாயம் விஜய்க்கு ஒரு நியாயமா ? விஜய்க்காக குரல் கொடுத்த Ops வாரிசுகள்.

0
3079
ops
- Advertisement -

சமீபத்தில் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்தவில்லை நடிகர் விஜய்யை பலரும் கேலி செய்து வருகின்றனர். விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கி இருந்தார். மேலும், தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு விஜய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் . இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் ’சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது என்று கடுமையாக கூறி இருந்தனர்.

-விளம்பரம்-

இதுமட்டுமல்லாம் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் முதல்வரின் நிவாரண நிதியாகச் செலுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து விஜய்யை பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால், உண்மையில் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு விஜய் வரி கட்டிவிட்டார். ஆனால், நுழைவு வரிக்கு தான் விலக்கு கேட்டு இருந்தார் விஜய். சரி, விஜய் மட்டும் தான் இப்படி செய்துள்ளாரா என்றால் இல்லை.

இதையும் பாருங்க : என் படத்துக்கு இத்தனை கோடி வேணும், ஆனால் இத்தனை லட்சம் தான் வந்திருக்கு மீண்டும் வீடியோ வெளியிட்ட செம்பருத்தி சீரியல் நடிகர்

- Advertisement -

சொகுசு காரை வெளி மாநிலங்கிளில் வாங்கி இருந்தால் கூட இந்த நுழைவு வரியை செலுத்த வேண்டும். அதாவது டெல்லியில் வாங்கிய காராக இருந்தாலும் தமிழ்நாட்டில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்யவேண்டுமானால் நுழைவு வரி கட்ட வேண்டும். ஆனால், இறக்குமதி வரி கட்டி வாங்கும் கார்களுக்கு இந்த நுழைவு வரி பொருந்தாது என்பது சொகுசு கார் வாடிக்கையாளர்களின் வாதம். மற்றவர்களை போல தான் விஜய்யும் நுழைவு வரிக்கு விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

Sachin Sells His Ferrari To A Surat Businessman | Cricket News – India TV

இது ஒரு புறம் இருக்க இந்த விவாகரத்தில் சச்சினையும் ஒப்பிட்டு புதிய சர்ச்சை என்று எழுந்துள்ளது. அதாவது இந்திய அணியின் முன்னர் கிரிக்கெட் வீரர் சச்சின், இங்கிலாந்தில் இருந்து கடந்த 2002 ஆம் ஆண்டு பெராரி காரை இறக்குமதி செய்தார். அதற்கான இறக்குமதி வரி மட்டுமே ரூ. 1.6 கோடி என சொல்லப்பட்டது. ஆனால், அந்த வரியை செலுத்தாமல் அப்போது வரி விலக்கு கேட்டு சச்சின் ஆளும் மத்திய பாஜக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

-விளம்பரம்-

உடனே அவருக்கு வரி விலக்கை அறிவித்தது. இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக அதிமுக துணை தலைவர் ops மகன் ஜெயப்ரதீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உழைப்பால் உயர்ந்தவர்களை அனைவரும் மனதார பாராட்ட வேண்டும்.சினிமா துறையில் தனது சொந்த உழைப்பால் உயர்ந்து, தான் வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வருமான வரியாக கோடிக்கணக்கான பணத்தை அரசிற்கு செலுத்தி வருபவர் நடிகர் விஜய். அந்த பணம் பல ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிகரமாக இருந்துள்ளது.

இறக்குமதி செய்த வாகனங்களுக்கு வரிவிலக்கு கேட்பது அவரவரின் உரிமை சார்ந்தது. இந்த உரிமை நடிகர் விஜய்க்கும் உண்டு. சினிமா பிரபலம் என்றால் அவருக்கு பொருந்தாது என்றாகாது. இதே போல் 2012 ல் வரிவிலக்கு கேட்டு சச்சின் டெண்டுல்கர் உள்பட பலரும் கோரிக்கை வைத்தார்கள். இதில் சச்சினுக்கு சட்டத்திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு ரூ 1.13 கோடி வரி விலக்கு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார்.

Advertisement