அபிஷேக்கிடம் ராஜூ சொன்ன அந்த நண்பர் கவின் தானா ? இதோ வைரலாகும் வீடியோ.

0
759
raju
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பயங்கர விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த முறை யார் டைட்டில் வின்னர்? என்று யூகிக்க முடியாத அளவுக்கு போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டு வருகிறார்கள். கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அபிஷேக் ராஜா குறைந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேற்றியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதேபோல கொரோனாவில் இருந்து கமலஹாசன் மீண்டு வந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் கமலஹாசன், சக போட்டியாளர்கள் இடம் இருந்து அபிஷேக் விடை பெறும்போது ராஜூ ஒரு அறிவுரை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்னாடி என்னுடைய மிகவும் நெருக்கமான நண்பர் ஒரு விஷயம் கூறினார். அதை உனக்கு சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். அது, One Day, One Fine Day, Tobe Your Day’. நீ அந்த நாளுக்காக காத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இப்படி ராஜூவுக்கு கவின் கூறி இருந்தார். இதை நெட்டிசன்கள் குறும்படமாக பதிவிட்டு ராஜீவுக்கு கவின் கூறிய அறிவுரை என்று பதிவிட்டு உள்ளார்கள். தற்போது இதை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், விஜய் டிவியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இவர் பல கஷ்ட நஷ்டங்களை கடந்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த லிப்ட் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து கவின் தற்போது புது படத்தில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். அதோடு கவின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளரும் ஆவார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு என்று ஒரு தனி ஆர்மி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

ஆனால், ராஜு தற்போது தன்னுடைய பெயர் டேமேஜ் ஆகி கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டு கவின் பெயரை பயன்படுத்தி மக்கள் மத்தியில் தனது ஆதரவை தேடுகிறார் என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதேபோல கவின் பங்கேற்ற போது அவரைப் பற்றி தவறாக பேசியதாகவும் அதனால் கவின் ராஜுவிடம் பேசுவது இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

Advertisement