அடிக்ஷன் எல்லாம் போய் செலக்ட் ஆகிட்டேன், கடைசில என் கண்ணால வேணாம்னு சொல்லிட்டாங்க – விஜய் பட வாய்ப்பு குறித்து ராஜு.

0
691
raju
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக கலக்கிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இவருடைய படம் வெளிவரப் போகிறது என்றாலே போதும் திரையரங்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அந்த அளவிற்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இவருக்கு மக்கள் மட்டும் ரசிகர்களாக இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும் இவருடைய ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு இவருடைய தீவிர ரசிகராம்.

-விளம்பரம்-

இதை இவரே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு தளபதியை ரொம்ப பிடிக்கும். தீவிர வெறியன் என்று சொல்லலாம். நண்பன் படத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த படத்தில் மில்லிமீட்டர் கதாபாத்திரத்தில் இருந்து சென்டிமீட்டர் ஆக மாற்றுவார்கள். அந்த சென்டிமீட்டர் ஆக நடிக்க சொல்லி என்னைக் கேட்டார்கள். அதோடு நண்பன் படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் என்னுடைய நண்பர். அவர் மூலமாக ஆடிசன் போய் என்னுடைய புகைப்படத்தை எல்லாம் கொடுத்தேன்.

- Advertisement -

ராஜுவுக்கு கிடைத்த நண்பன் பட வாய்ப்பு:

அப்போது ஷங்கர் சாரும் சரி இந்த பையனை சென்டிமீட்டர் ஆக போட்டுவிடலாம் என்று சொன்னார். நானும் நடிக்க தயாராகி போனேன். அப்போது வேறு ஒருவர் இவருடைய கண்ணு என்ன ரொம்ப பெரிதாக இருக்கிறது. மில்லி மீட்டரிலிருந்து சென்டிமீட்டருக்கு ஆளுதான் வளருமே தவிர கண்ணு வளரக்கூடாது பார்த்து பண்ணுங்கள் என்று சொன்னார். உடனே சங்கர் சார் என்னை கூப்பிட்டு உனக்கு உன்னுடைய கண்ணு தான் மைனஸ் பாயிண்ட். அதனால் நீ நடிக்க முடியாது என்று சொன்னார். எனக்கு ரொம்ப ஏமாற்றமாய் இருந்தது.

விஜயின் தீவிர ரசிகர் ராஜு:

நான் கண்ணை மூடிக்கொண்டு கூட நடிக்கிறேன் எனக்கு எப்படியாவது தளபதி பக்கத்தில் நின்றால் போதும் என்றெல்லாம் கேட்டேன். ஆனால் முடியாமல் போனது. பின் நண்பன் பட விழாவில் தளபதி பக்கத்தில் நிற்கிற வாய்ப்புகள் நிறைய வந்தது. ஆனால், நான் தான் போகவில்லை. ஏன்னா, கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரிடம் கை கொடுப்பார்கள். அவருக்கு நம்மை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளனும் என்றால் ஏதாவது ஒன்னு சாதிக்கனும் முன்னாள் நிக்கணும் என்று தான் நான் போகவில்லை. அவரை தூரத்தில் கண்டு ரசிக்கிறேன். ஏதாவது ஒன்னு சாதித்து அவரிடம் போய் நிற்பேன்.

-விளம்பரம்-

வைரலாகும் ராஜு வீடியோ:

அவர் கையை பிடிப்பேன். இதெல்லாம் விட நான் பள்ளியில் படிக்கும்போது விஜய் ரசிகர்கள் உள்ளவர்களிடம் மட்டும் தான் நட்பு வைத்திருப்பேன். அதேபோல் பெண்களிடம் பழகும் போதும் ஆரம்பத்தில் பேசும் போது நீங்கள் யாருடைய ரசிகர் என்று கேட்பேன். அவர்கள் விஜய் ரசிகர் என்றால் உடனே நானும் பழகுவேன். இல்லை என்றால் நான் அப்படியே வந்து விடுவேன் என்று காமெடியாக பேசியிருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமானவர் ராஜு. இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார்.

ராஜு நடித்த சீரியல்:

அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீசனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்று பல சீரியலில் நடித்து இருந்தார்.பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னனு தெரியுமா படத்தில் லீட் ரோலில் நடிகர் ராஜூ நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காததால் ராஜூ சின்னத்திரை பக்கமே வந்துவிட்டார். மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜூ அவர்கள் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதேபோல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறமையாக விளையாடி டைட்டில் வின்னர் என்ற படத்தை பெற்றார்.

Advertisement