விஜய் டிவியில் கடந்த மாதம் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்றுகொண்டிருக்கின்றது. இதுவரை இல்லாத பல மாற்றங்களை இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொண்டு வந்து இருக்கிறார்கள். அதிலும் தெரிந்த முகங்களை விட தெரிந்த முகங்கள் தான் அதிகம். இதனாலே பிக் பாஸ் வீட்டுக்குள் கலவரம் வெடித்து கொண்டு இருக்கிறது. மேலும், நாட்கள் செல்லச்செல்ல போட்டிகளும், சவால்களும் அதிகரிப்பதால் போட்டியாளர்களுள் வன்மம் அதிகரித்து கொண்டு வருகிறது.
வழக்கம்போல் பிக் பாஸ் வீட்டில் குரூப் சேர்த்துவது, புறணி பேசுவது என அனைத்தையும் செய்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க நிகழ்ச்சியில் கமலஹாசன் குறும்படம் போடுகிறாரோ? இல்லையோ? நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் குறும்படம் போட்டு சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ராஜுவின் குறும்படம் என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
நேற்று எபிசோட்டில் தலைவராக இருந்த நிருப் நாணயத்தின் ஆளுமையை அண்ணாச்சி, பிரியங்கா, அபிஷேக்கு பிரித்துக் கொடுப்பது பற்றி கூறியிருந்தார். அதில் உடன்பாடில்லாத அண்ணாச்சி எனக்கு பிரியங்கா மீதும் அபிஷேக் மீதும் நம்பிக்கை இல்லை, சந்தேகமாக இருக்கிறது. நான் இந்த விதி முறையை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீங்கள் சொல்வதை கேட்க முடியாது என்று பேசினார்.
உடனே பிரியங்கா கோபமாகி, நீங்கள் எப்படி என்னை சந்தேகப்படுக்கிறீர்கள்? என்று சொல்வீர்கள். நான் என்ன பண்ணேன். நீங்கள் தான் எந்த வேலையும் செய்யாமல் ஓபி அடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்னைப் பற்றி எதுவும் பேச தேவை இல்லை என்று கூறினார். பின் அண்ணாச்சியும் பிரியங்காவும் மாத்தி மாத்தி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ராஜு பொங்கி எழுந்து அண்ணாச்சி பாத்திரம் விலக்குக்கிறார், இதை செய்கிறார், அதை செய்கிறார் . நீங்கள் தயவு செய்து அவரை ஓபி அடிக்கிறார் என்று சொல்லாதீர்கள் என்று கூறினார்.
அதே சில தினங்களுக்கு முன் வீட்டில் எல்லோருக்கும் பட்டபெயர் கொடுக்கும்போது அண்ணாச்சிக்கு வேலையில் இருந்து எஸ்கேப் ஆகிறவர் என்று ராஜு சொல்லியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ராஜு அப்படியும் பேசுகிறார், இப்படியும் பேசுகிறார் என்று வடிவேலுவின் காமெடி வீடியோவை போட்டு ராஜுவின் குறும்படம் என்று பகிர்ந்து இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ ஜெட் வேகத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ராஜு உள்ளுக்குள் வைத்துக் கொண்டு வெளியில் காட்டாமல் சேப் கேம் விளையாடுகிறார் என்றும் நேரடியாக சண்டை போடாமல் புறணி பேசுகிறார் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இப்படியே போனால் ராஜு எத்தனை நாட்கள் வீட்டில் இருக்கப் போகிறார்? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.