பிக் பாஸுக்கு சென்ற ராஜூ – கத்தி ரோல் என்ன ஆச்சி – NINIலில் இன்று வெளியான ஷாக்கிங் முடிவு.

0
3477
naam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இதில் கத்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ராஜு. இவருக்கென்று இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனால் இவரை சமீப நாட்களாகவே சீரியலில் காண முடியவில்லை. கத்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராஜு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் அவரது கதாபாத்திரத்தை எப்படி கொண்டு செல்லப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

- Advertisement -

அதேபோல ராஜுவிற்கு பதிலாக வேறு யாராவது நடிக்க போகிறார்களா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்திருக்கிறது. இன்று ஒளிபரப்பாகி இருக்கும் எபிசோடில் மாயன் கத்தி எங்கே என்று தேடிக்கொண்டு இருக்கு, மாறன், மாயனுக்கு போன் செய்து உன் கத்திக்கு துபாயில் வேலை கிடைத்து விட்டது அவர் துபாய் கிளம்பிட்டான் என்று சொல்கிறார்.

மாயன் ஏர் போர்ட் சென்று பார்ப்பதற்க்குள் கத்தி, துபாய் சென்று விட்டது போல கான்பிக்கின்றனர். இருப்பினும் இந்த முடிவை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணமே ராஜுவிற்கு பதில் வேறு யாராவது கதாபாத்திரத்தில் நடிக்க வந்து இருந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் அதை ஏற்றுக்கொண்டு இருக்கமாட்டார்கள். அதேபோல தற்போது கத்தி வெளிநாடு சென்றது போல காண்பிக்கப்பட்டு இருப்பதால் கண்டிப்பாக ராஜு பிக்பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் மீண்டும் இந்த சீரியலில் தொடர்வார் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement