ராஜு கேட்டது தப்பு, ஓகே – அப்போ பிரியங்கா பேசினது பாவனி சொன்னது ? பல குறும்படங்களை போட்ட நெட்டிசன்கள்.

0
412
raju
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து வருகிறது. அதே போல அடிக்கடி பிக் பாஸ் வீட்டில் எதாவது ஒரு சர்ச்சை எழுந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது சமூக வலைதளத்தில் நேற்று ராஜு செய்த விஷயம் தான் பேசு பொருளாக ஆகி இருக்கிறது. நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு truth or dare என்ற விளையாட்டு டாஸ்க்காக கொடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

மிகவும் ஜாலியாக இருக்கும் என்று எதிர்பார்த்த இந்த டாஸ்கில், ராஜு பாட்டிலை சுற்றிய போது அபிநய்யிடம் ‘பாவனியை லவ் பண்றீங்களா’ என்று கேட்டது பலரை ஷாக்கில் ஆழ்த்தியது. இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அபிநய் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று திகைத்துப்போனார். அதன் பின்னர் இல்லை என்று கூறினார்.

- Advertisement -

இந்த டாஸ்கின் போது ராஜு கேட்டதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிறிது நேரம் கழித்து ராஜு சொன்னது தவறு என்று பலர் கூறினர். அதிலும் குறிப்பாக பிரியங்காவிடம் ராஜு, நான் கேட்டது தப்பா என்று கேட்டதர்க்கு மிகவும் கேவலமான கேள்வி அது என்று கூறி இருந்தார்.

அதே போல ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் ஒருவரையும் கணவரை இழந்த பெண் ஒருவரையும் ராஜு இப்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜு இப்படி பாவனியிடம் பேசி சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பஞ்ச பூத டாஸ்கின் போது ஸ்ருதிக்கும், தாமரைச்செல்விக்கும் இடையிலான பிரச்சனை பயங்கரமாக முற்றியது. அப்போது வீட்டில் ராஜு உட்பட தாமரைக்கு ஆதரவாக தான் பேசினர். ஆனால், பாவனி மட்டும் சுருதிக்கு ஆதரவாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

அப்போது ராஜு – பாவனி இருவருக்கும் சில வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து ராஜு, பாவனியிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, ட்ரஸ் மாத்தும் போது எப்படி எடுப்பீர்கள். நான் இப்போ உங்களிடம் இருந்து காயினை எடுக்க வேண்டும், நீங்க ட்ரெஸ் மாத்தும் போது விடுவீங்களா என்று கேட்டு இருந்தது அப்போது பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றய நிகழ்ச்சியால் ராஜுவை பலர் திட்டி வந்தாலும், அவருக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாவனி மற்றும் அபிநய்யை பற்றி நிரூப்பிடம் கிசு கிசு பேசிய பிரியங்காவின் வீடியோ தற்போது பகிர்ந்து, ராஜு கேட்டது தப்புன்னா பிரியங்கா சொன்னதும் தப்பு தான் என்று கூறி வருகின்றனர்.

அதே போல பாவனினிக்கு அபிநய் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது என்றும் அதற்கு சான்றாக முதல் வாரத்தில் அபிநய்யிடம் பாவனி பேசிய வீடியோ ஒன்றை தற்போது பகிர்ந்து வருகின்றனர். மேலும்ம் நேற்றய நிகழ்ச்சியில் கூட பாவனியிடம் பேசிய அபிநய் ‘அப்படியே நம்ம ரெண்டு பேருக்குள்ள எதாவது இருந்தாலும் அவனுக்கு என்ன பிரச்சனை ‘ என்று அபிநய் பேசியதையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Advertisement