அஜித், விஜய் ரேஞ்சுக்கு பிரம்மாண்ட கட் அவுட் – ரம்யாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள். நீங்களே பாருங்க.

0
1880
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் இளம் நடிகையான ரம்யா பாண்டியன் ஒருவர். நடிகை ரம்யா பாண்டியன் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.மேலும், ராஜி முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜோக்கர் திரைப்படம். இது சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர்.

-விளம்பரம்-

அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

இதையும் பாருங்க : அடேங்கப்பா, தெய்வதிருமகள் அண்ணியாரின் மகளா இது ? குளியல் தொட்டியில் கையில் கிளாசுடன் கொடுத்த போஸ பாருங்க.

- Advertisement -

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரை வந்த ரம்யா பாண்டியனுக்கு நான்காம் இடம் தான் கிடைத்தது. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் இவருக்கு சமூக வலைதளத்தில் அந்த அளவிற்கு ஹேட்டர்ஸ் என்பது இல்லாமல் தான் இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பல ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.

இருப்பினும் ரம்யாவிற்கு என்று பல ஆர்மிக்கள் இருந்து தான் வருகிறது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 கொண்டாட்ட நிகழ்ச்சியில் கூட ரம்யாவை சந்திக்க அவரின் பல பெண் ரசிகர்கள் வந்து ரம்யாவை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் விஜய், அஜித் ரேஞ்சுக்கு ரம்யாவின் ரசிகர்கள் சிலர் பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றை வைத்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ரம்யாவாவே காசு கொடுத்து இப்படி வைக்க சொன்னார்களா என்று கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement