மேள தாள சரவெடி, ரோட்டில் குத்தாட்டம் – ரம்யா பாண்டியனை வரவேற்ற குடும்பத்தினர். வைரலாகும் வீடியோ இதோ.

0
4859
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர் அதில் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளர் என்றால் அது நடிகை ரம்யா பாண்டியன் தான் தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை ரம்யா பாண்டியன் இந்த திரைப் படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

- Advertisement -

இருப்பினும் இடையில் இவர் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தார் இதனால் இவருக்கு சமூக வலைதளத்தில் இளசுகளின் ஆர்மி கூட உருவானது மேலும் இவர் வெளியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். அதன் பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்தது. ஆரம்பத்தில் இவருக்கு எக்கச்சக்க ஆதரவு இருந்தது.

ஆனால், வாரங்கள் செல்லச்செல்ல ரசிகர்களின் ஒரு சிலர் வெறுப்பை சம்பாதித்தார். அதே போல இவர் ஆரம்பத்தில் டாப் 3 இடத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிக் பாஸில் இவருக்கு கிடைத்தது என்னவோ நான்காம் இடம் தான். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரம்யா பாண்டியனை அவரது குடும்பத்தினர் கேரள மேள தாளத்துடன் வரவேற்றுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement