கடந்த ஆண்டு 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர் . அதில் நமக்கு பரிட்சியமான முகமாக சில பிக் பாஸ் போட்டியாளர்கள் அறிமுகமானார்கள் அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் தான் ரம்யா, என் எஸ் கே குடும்பத்தை சேர்ந்தவர் என்றே தெரியவந்தது.பழம் பெரும் நடிகர் என் எஸ் கலைவாணரின் பேத்தியான இவர், சங்கீதத்தின் மீது மிகுந்தஆர்வம் கொண்டவர்.
https://www.instagram.com/p/CCdODrfjxq-/
அதனால் தான் தனது சிறு வயது முதலே கர்னாடிக் தனது முறைபடி கற்று வந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சங்கீதம் கற்று வந்த இவர், இதுவரை தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை படியுள்ளார்.பாடகி ரம்யா, கடந்த ஆண்டு விஜய் டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மும்தாஜ், ஜனனி ஐயர் போன்ற முக்கிய நபர்கள் மட்டும் கலந்து கொண்டு இருந்தனர்.
இதையும் பாருங்க : ஷாலு ஷம்முவை போல பஜாட்டா நடனம். ஷாக் கொடுத்த ஸ்ரீதிவ்யாவின் அக்கா. வீடியோ இதோ.
ரம்யா திருமணம் செய்துகொண்ட நடிகர் சத்யா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீலக்குயில் என்ற தொடரில் ஜெய்சூர்யா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் தர்ஷனின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரம்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. அதனை தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
https://www.instagram.com/p/CCeKAKODUyH/
ரம்யாவின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆகியுள்ளார்கள். சமீபத்தில் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரம்யா, ஆம், நான் கர்ப்பமாக தான் இருந்தேன். இருப்பினும் அதை உங்களில் பலபேர் கவனிக்கவில்லை. மேலும், எனக்கு நெருக்கமானவர்கள் ஏற்பாடு செய்த திடீர் வளைகாப்பில் சில புகைப்படங்களையும் பகிர்கிறேன் என்று தனது வளைகாப்பில் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் ரம்யா. வளைகாப்பின் போது மும்தாஜ் , ஜனனி, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பலர் கலந்து கொண்டு இருந்துள்ளனர். இந்த புகைபடத்தை ரம்யா அப்போதே பதிவிட்டுள்ளார்.




