நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அந்த படத்திற்கு பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்த்த எத்தனையோ நடிகைகள் காணாமல் போய் இருக்கிறார்கள். அந்த வகையில் அந்த லிஸ்டில் மிக அருகில் இருப்பவர் நடிகை ஸ்ரீதிவ்யாவும் ஒருவர்.
ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தில் பிறந்தவர். அதுமட்டுமில்லாமல் ஸ்ரீதிவ்யா அவர்கள் மூன்று வயதிலேயே தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் என்றும் சொல்லலாம். இவர் பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், 2010 ஆம் ஆண்டு தான் இவர் ‘மனசார’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமா திரை உலகில் அறிமுகமானார்.
பார்ப்பதற்கு மிகவும் சின்ன பெண் போல இருக்கும் இவரது தோற்றதால் என்னவோ இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளைக்கார துரை, மருது என பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக ஜீவா நடித்த ‘சங்கிலி புங்கிலி கதவ தோற’ படத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டு வருடங்களுக்கு பின்னர் அதர்வாவுடன் ‘ஒத்தைக் ஒத்த’ என்ற படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார்.
மேலும்,ஸ்ரீதிவ்யாவிற்கு, ஸ்ரீரம்யா என்ற சகோதரியும் இருக்கிறார். நடித்த ‘யமுனா ‘ என்ற படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதில் மிகவும் கவரிச்சியாக நடித்திருந்த ஸ்ரீரம்யாவை கண்டு பலரும் ஷாக்கானார்கள். இந்த நிலையில் ஸ்ரீரம்யா, ஆணுடன் ஒட்டி உரசி நடனமாடிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நடனத்தை பார்க்கும் போது சமீபத்தில் ஷாலு ஷம்மு வெளியிட்ட பாஜாட்டா நடன வீடியோ போலவே இருக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் ஷாலு ஷம்முவும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்திருந்தார் என்பது தான்.