வேலையை விட்டுவிட்டு படத்தில் நடிக்க வந்த ரம்யா பாண்டியனை ஏமாற்றியது இந்த இயக்குனர் தானா ? என்ன படம் தெரியுமா ?

0
1738
ramyapandian
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் நடிகர் ஆரி, நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகை ரேகா, நடிகை ரம்யா பாண்டியன், பாடகர் வேல்முருகன், நடிகை சிவானி, நடிகை கேப்ரில்லா என்று ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் நடிகை ரம்யா பாண்டியன் மிகவும் பிரபலம் தான். நடிகை ரம்யா பாண்டியன் திருநெல்வேலியில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் முதன் முதலில் குறும் படங்களில் தான் நடிக்க தொடங்கினார். குறும் படங்களுக்கு பிறகு தான் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின.

-விளம்பரம்-
Ra Ra Ra Rajasekar

இவர் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் அவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால், இவர் அதற்கு முன்பாகவே ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது நேற்று இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொன்ன பிறகு தான் பலருக்கும் தெரிந்தது. கடந்த சில தினங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த டாக்கில் போட்டியாளர்கள் தங்கள் கடந்து வந்த பாதை குறித்து கூறி வருகின்றனர். அந்த வகையில் இன்று ரம்யா பாண்டியன் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறி வந்தார். அப்போது பேசிய அவர் ‘தான் கல்லூரி படிக்கும்போதே என்னுடைய செலவை நானே பார்த்துக் கொண்டேன்.

இதையும் பாருங்க : இது தான் 10 வருடத்திற்கு முன் சோம் சேகர் கலந்து கொண்ட அந்த விஜய் டிவி நிகழ்ச்சி – எப்படி இருக்கார் பாருங்க.

- Advertisement -

அதன் பின்னர் ஒரு அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்றேன் அப்போது என்னுடைய அக்கா ஆடை வடிவமைப்பாளராக இருந்தபோது அவருடன் ஒரு நாள் சென்றேன். அப்போது அங்கு இருந்தவர் சும்மா என்னை ஒரு புகைப்படம் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படத்தின் மூலம் எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.முதலில் என் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் அவர்களை சமாதானம் செய்து நடிக்க சென்றுவிட்டேன். ஆனால், அந்த படத்தில் நடிக்க எனக்கு சம்பளம் இல்லை என்று சொன்னார்கள். இருப்பினும் இந்த கதை மிகவும் நல்ல கதை என்று கூறினார்கள். இதனால் அப்போது நான் பார்த்துக்கொண்டு இருந்த என்னுடைய வேலையை விட்டுவிட்டு அந்த படத்தில் நடிக்க சென்றேன்.

ஆனால் நான் ஒரு நாள் தான் நடித்தேன். நான் நடித்த அடுத்த நாளே என்னை நீக்கி விட்டு வேறு ஒரு நடிகையை அந்த படத்தில் கமிட் செய்துவிட்டனர். அதன் பின்னர் தான் எனக்கு ஜோக்கர் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பல தேசிய விருது கிடைத்தாலும் எனக்கு பெரிதாக பிரபலம் கிடைக்கவில்லை. அதைப்பற்றி நான் வருத்தப்படவும் இல்லை’ என்று கூறியிருந்தார். ரம்யா பாண்டியன் ஒரு நாள் நடித்த படம் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாக இருந்த ‘ரா ரா ராஜஷேகர்’ என்ற படம் தான் என்று கூறப்படுகிறது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாக இருந்த இந்த படத்தை லிங்குசாமி தான் தயாரிப்பதாக இருந்தது.

-விளம்பரம்-

Advertisement