தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படி ஒரு நிலையில் காவேரி பிரச்சனையின் போது உண்ணா விரதம் இருந்த ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த குழந்தை வேறு யாரும் இல்லை பிரபல நடிகையான நடிகை ரேகாவின் மகள் தான்.இதுகுறித்து பதிவிட்டுள்ள ரேகா, புகைப்படமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த தருணத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு ரஜினிஃபைடு 2கே கிட்ஸ்க்கு நன்றி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தனது 9 மணிநேர உண்ணாவிரதத்தை காவிரி பிரச்சனை சூழலில் முடித்தபோது, என் மகள் கொடுத்த ஒரு கிளாஸ் ஜூஸைப் பருகினார். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபராகவும், ஒரு நல்ல காரணத்தின் ஒரு பகுதியாகவும் அவள் ஆசீர்வதிக்கப்பட்டாள் என்று பதிவிட்டுள்ளார் ரேகா. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் டீச்சர் என்றால் முதலில் நினைவிற்கு முதலில் வருவது ரேகா தான். சத்யராஜ் நடிப்பில் வெளியான கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிபர் என்ற டீச்சராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்னர் “காவலன் அவன் கோவலன்”, “புன்னகை மன்னன்” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போதும் தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இறுதியாக இவர் “பியார் ப்ரேமா காதல்” படத்தில் ஹரிஸ் கல்யாண் அம்மாவாக நடித்திருந்தார். மேலும், விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்ட ரேகா பின்னர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஆனால், இவர் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். நடிகை ரேகா கடந்த 1996 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான பெண் கொழந்தையும் பிறந்தது. அவருடைய பெயர் அனுஷா. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அனுஷா, சினிமாவில் நடிக்கப்போகிறார் என்று தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவல் உண்மை இல்லை என்று கூறி இருந்தார் ரேகா.