கடத்த இரண்டு நாட்களாக சுமுகமாக போய்க்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சண்டையும், சோகமுமாக போய் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் அதில் பிரபல சின்னத்திரை மற்றும் சினிமா நடிகையுமான ரேஷ்மாவும் ஒருவர்.
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரைத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேஷ்மா பசுபதி.
சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் தனது உயர் படிப்பை அமெரிக்காவில் பயின்றார். படிப்பை முடித்துவிட்டு விமானப் பணிப்பெண்ணாக சிறிது காலம் பணியாற்றி வந்தார். ஆனால், நடிப்பில் ஆர்வம் என்பதால் சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக உள்ளார்.
சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.அப்போது , ரேஷ்மாவிடம் ‘வாழ்க்கையில் மறக்க முடியாத இழப்பு என்ன’ என்று பாத்திமா கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரேஷ்மா ‘நான் 9 மாதம் கர்ப்பமாக இருந்ததேன். அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த போது என் வயிற்றில் இருந்த குழந்தையின் இதய துடிப்பு நின்று இறந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அந்த இழப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்’ என்று கண்ணீர் விட்டு கதறியபடி ரேஷ்மா கூற சக போட்டியாளர்கள் அனைவருமே கண்ணீர் விட்டு அழுது விட்டனர்.