கவின் பற்றி சாக்க்ஷி இப்படி தான் நினைக்கிறார் .! ட்வீட் செய்த முன்னாள் போட்டியாளர்.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!

0
4576
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேறியதற்கு பல்வேறு பிக் பாஸ் பிரபலங்களும் ட்வீட் செய்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பல வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய ரேஷ்மா, கவின் வெளியேறியது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் , நான் கவினின் இந்த முடிவை ஆதரிக்கிறேன், அவன் ஒரு சிறந்த நபர். மற்றவர்கள் செய்ய முடியாததை அவர் செய்துள்ளார். இதை நீங்கள் விட்டு கொடுத்து விட்டார் இல்லை எப்படி சொன்னாலும் சரி. என்னை பொறுத்த வரை கவின் தான் வெற்றியாளர் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

ரேஷ்மா, கவின் குறித்து நல்லபடியாக கூறினாலும் ஒரு சில ரசிகர்கள் கவின் பெயரை வைத்து பிரபலம் தேடி கொள்ளாதீர்கள் என்றும், உள்ளே இருந்த வரை கவினை பற்றி சாக்க்ஷியிடம் நீங்கள் என்னனென்ன சொன்னீர்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு ரேஷ்மா வை வறுத்தெடுத்தனர். இதனால் ரேஷ்மா சங்கடத்திற்கு உள்ளனர்.

இதையும் பாருங்க : நான் பேசியதை காப்பி அடித்தாரா விஜய்.! சர்ச்சைக்கு விளக்கமளித்த பேச்சாளர் கவிதா.!

- Advertisement -

ரசிகர்களின் இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ரேஷ்மா, எனக்கு போதுமான அளவு பிரபலம் இருக்கிறது. இதற்கு மேல் எனக்கு புதிதாக ஒன்றும் தேவை இல்லை. என் மனதில் பட்டவையை தான் நான் இங்கே எழுதி இருக்கிறேன். அதையும் நீங்கள் கேவலப்படுத்த நான் உங்கள் எண்ணத்தை கடவுள் தான் பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும்,சாக்க்ஷி குறித்து பதிவிட்டுள்ள ரேஷ்மா சாக்ஷி கூட கவின் என்னை போல தான் நினைத்தார் நானும் சாக்க்ஷி யும் நல்ல நண்பர்கள்தான். அதனால் அவரைப் பற்றி தவறாக பேசாதீர்கள். சாக்ஷிக்கு கூட கவின் மீது நல்ல மரியாதை இருக்கிறது யாரும் இங்கே ஒழுங்கு இல்லை, அதை புரிந்து கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார் ரேஷ்மா.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement