தமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ‘இளைய தளபதி விஜய்’.அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான “பிகில்” படம் அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று வெளிவர உள்ளது என்ற தகவல்கள் சமூக வலைத் தளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது.மேலும்,பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.மேலும் இந்தப் படத்துக்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். விஜய் நடிப்பில் வரவிருக்கும் விஜயின் 63 வது படமான ‘பிகில்’ ரசிகர்களிடையே அதிக ஆர்ப்பாட்டத்தையும், ஆவலையும் தூண்டியுள்ளது.
இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.அது அப்பா மற்றும் மகன் வேடத்தில் நடித்து உள்ளார். இதில் மகன் “மைக்கேல்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பாவின் பெயர் “ராயப்பன்” என மிரட்டலான ,அதிரடி பெயரை வைத்து உள்ளார்கள். போஸ்டரில் அப்பாவை பார்க்கும்போது கறிகளை வெட்டும் கசாப்கரன் என்று தெரிய வருகிறது. இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும். அதனின் கொண்டாட்டமாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு விழா தனியார் கல்லூரியில் மீரல வைக்கும் அளவிற்கு நடந்து முடிந்தது.
இதையும் பாருங்க : மீண்டும் வனிதாவை வாத்து என்று குறிப்பிட்ட கஸ்தூரி.! கடுப்பாகி வனிதா போட்ட பதிவு.! முற்றும் மோதல்.!
இந்த இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவர்கள் பேசிய வார்த்தைகள் அதிமுகவுக்கு எதிராக விமர்சனங்கள் செய்தது போல இருந்தது.மேலும் நடிகர் விஜய் அவர்கள் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ஒரு குட்டி கதை சொல்லி இருந்தார்.பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி கதை காப்பியடித்து என்று சமூகவலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இந்த விழாவில் நடிகர் விஜய் அவர்கள் நிறைய அரசியல் சம்பந்தமான கருத்துக்களை கூறிஉள்ளார். முக்கியமாக யாரை எந்த இடத்தில் உட்கார வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் உட்கார வைத்தால் நல்லது என்று அவர் கூறிய வார்த்தை பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பூ கடையில் வேலை பார்த்த சிறுவனை வெடி கடையில் அமர வைத்தால் அப்படித்தான் வியாபாரம் மூழ்கிப் போகும் என்று கூறினார் .
அந்த சிறுவன் பூக்கடையில் பூக்களுக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளிப்பது போல பட்டாசு கடையில் இருக்கும் பட்டாசுக்கும் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்தார். இதனால் அங்கு வியாபாரமே நடக்கவில்லை. நஷ்டத்தில் போய்க் கொண்டிருந்தது என்று கூறினார்.ஆகவே யாருக்கு எந்த இடத்தை கொடுக்க வேண்டுமோ? அவர்களுக்கு அந்த இடத்தைக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு கூறிய பேச்சு மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த பேச்சை ஏற்கனவே பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் பேசினார் என்ற சர்ச்சை வெளியானது. இவர்களுடைய இரண்டு பேரின் பேச்சும் ஒரே மாதிரி இருந்தது என்று இணையங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அதற்கு கவிதா ஜவகர் அவர்கள் கூறியது, விஜய் அவர்கள் முதலில் சொன்னது திருக்குறள். திருக்குறளை யாரும் காப்பியடிக்க முடியாது. திருக்குறள் அனைவருக்கும் பொதுவானது என்று கூறினார்.
மேலும், அவர் சொன்ன குட்டி கதை நான் எல்லா மேடைகளிலும் சொல்லி இருக்கேன். அதுமட்டுமில்லாமல், பல பெரிய பேச்சாளர்களும், கவிஞர்களும் இந்த குட்டிக் கதையை பல இடங்களில் உபயோகித்துள்ளார்கள். அதனால், காலங்காலமாக மக்கள் மத்தியில் இந்த கதை பரவிக்கொண்டு தான் இருக்கிறது. அதனால் விஜய் அவர்கள் இதை எங்காவது கேட்டுக்கொண்டு இருப்பார், அதை இங்கு சொல்லி இருப்பார் என்று அவர் கூறினார். மேலும், நான் விஜய் அவர்களின் தீவிர ரசிகை .அவருடைய பேச்சுக்கும் நான் ரசிகை ஆகி விட்டேன் என்று கூறினார். விஜய் மிகவும் ரொம்ப அழகாக பேசி தன்னுடைய கருத்துகளை மிகக் கோர்வையாக குறிப்பிட்டு கூறினார். இது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.