இப்போ தான் விஜய் டிவிக்கு வந்தாரு, அதுக்குள்ள ரியோ குறித்து ராஜா ராணி சீரியல் நடிகர் சித்து என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
2751
rio
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்றோடு (ஜனவரி 17) நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-
rio

தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே. அதே போல இந்த சீஸனின் ஆரி தான் வெற்றி பெற்றுள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகிவிட்டது. அதே போல பாலாஜி இரண்டாம் இடத்தையும் ரியோ மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மற்ற சீசன்களைவிட இந்த சீசனில் தான் எக்கசக்க விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதிலும் ஷிவானி, ஆஜீத் ஆகியோரை எல்லாம் பொத்தி பொத்தி காப்பற்றியது பிக் பாஸ். இதில் ரியோவை பற்றி சொல்லவா வேண்டும். அதிலும் கடந்த வாரம் பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் ரியோ கடைசி வார நாமினேஷனில் இருந்த போது அவரை இறுதி போட்டிக்கு அனுப்ப பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். பலரும் ரியோவிற்கு 50 வாக்குகளை அளித்த ஸ்க்ரீன் ஷாட்டை கூட தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

இப்படி ஒரு நிலையில் நிலையில் விஜய் டிவியில் ராஜா ராணி 2 மூலம் விஜய் டிவிக்கு என்ட்ரி கொடுத்துள்ள திருமணம் சீரியல் நடிகர் சித்து, ரியோ குறித்து பதிவிட்டுள்ளார். அதில்., பிக் பாஸ்ல நீங்க வின் பண்றீங்களோ இல்லையோ மனசு அளவுல நீங்க எப்பயோ வின் பண்ணிடீங்க. நீங்க எப்படிபட்ட மனிதர்னு உங்க கூட பழகுன எங்க எல்லாருக்கும் தெரியும். நீங்க பட்ட கஷ்டத்துக்கு கண்டிப்பா உங்களுக்கு நெறய வெற்றி வரும் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement